வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் புலாவ்

Photo of Coconut milk pulao by Yasmin Shabira at BetterButter
438
0
0.0(0)
0

தேங்காய் பால் புலாவ்

Aug-13-2018
Yasmin Shabira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் புலாவ் செய்முறை பற்றி

இது மிகவும் சுவையான புரதச்சத்து நிறைந்த புலாவ். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுக்கூடிய உணவாகும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரியாணி அரிசி : 2 கப்
  2. தேங்காய் (பெரியது) : 1
  3. வெங்காயம் : 2
  4. பட்டை : சிறு துண்டு
  5. கிராம்பு : 2
  6. ஏலக்காய் : 2
  7. இஞ்சி பூண்டு விழுது : 2 மேசைக்கரண்டி
  8. எண்ணெய் : 4 மேசைக்கரண்டி
  9. நெய் : 1 தேக்கரண்டி ( optional)
  10. கேரட் : 2
  11. பச்சை பட்டாணி : 1 கப்
  12. மல்லித்தழை : ஒரு கையளவு
  13. உப்பு : தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. தேங்காயை துறுவி அரைத்து மூன்று அல்லது நான்கு முறை பாலெடுத்து கொள்ளவும். நாலரை கப் அளவு பாலெடுத்து கொள்ளவும்.
  2. ப்ரெஷர் குக்கரை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்
  3. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவேண்டும்
  5. நன்றாக பச்சை வாசனை போன பிறகு நறுக்கிய கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  7. அரிசியை நன்றாக களைந்து சேர்க்கவும்
  8. நாலரை கப் அளவு தேங்காய் பால் சேர்க்கவேண்டும். தேங்காய் பால் கொஞ்சம் கம்மியாக இருந்தால் தண்ணீர் கலந்து கொள்ளவும்.
  9. ஆனால் தண்ணீர் சேர்க்காமல் வெறும் தேங்காய் பால் மட்டும் சேர்த்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
  10. மேலே சிறிது நெய் விட்டு நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி வெயிட் போடவும்
  11. 4 முதல் 5 விசில்களுக்கு வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.
  12. ப்ரஷர் விட்டதும் குக்கரை திறந்து மேலே சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் உருளைக்கிழங்கு வறுவல், முட்டை மசாலாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்