வீடு / சமையல் குறிப்பு / முட்டை பிரியாணி

Photo of Egg Briyani by Jasmine Joshua at BetterButter
270
1
0.0(0)
0

முட்டை பிரியாணி

Aug-15-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை பிரியாணி செய்முறை பற்றி

மிகவும் எளிதாக செய்யக்கூடிய முட்டை பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 4
  2. பாஸ்மதி அரிசி 2 கப்
  3. பல்லாரி 2
  4. தக்காளி-2
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  7. கொத்தமல்லி தூள் ஒரு ஸ்பூன்
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  10. நெய் 2 ஸ்பூன்
  11. முந்திரி பாதாம் சிறிது
  12. தயிர் ஒரு ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி முந்திரி பாதாம் ஆகியவற்றை நன்கு வறுக்கவும்
  2. பொன்னிறமாக வறுத்த பின்பு கரம் மசாலா பல்லாரி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது தக்காளி மல்லி தூள் மிளகாய் தூள் தயிர் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. 20 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் விடவும்
  5. குக்கரில் 2 விசில் வரை வேக விடவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி மஞ்சள் மிளகாய் தூள் மிளகு தூள் சேர்த்து வேகவைத்த முட்டைகளை இரண்டாக கீறி பொரித்து எடுக்கவும்
  7. பொரித்த முட்டைகளை பிரியாணியுடன் சேர்த்து லேசாக கிளறி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்