வீடு / சமையல் குறிப்பு / சீஸி வெஜிடபிள் பிரட் கப்ஸ்

Photo of Cheesy Vegetable Bread Cups by Sowmya Sundar at BetterButter
307
0
0.0(0)
0

சீஸி வெஜிடபிள் பிரட் கப்ஸ்

Aug-18-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸி வெஜிடபிள் பிரட் கப்ஸ் செய்முறை பற்றி

வெஜிடபிள்ஸ் மற்றும் சீஸ் சேர்த்து செய்த பிரட் கப்ஸ். டிபன் பாக்ஸில் வைக்க ஹெல்த்தியான பதார்த்தம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டு-4
  2. வெண்ணெய்- 2 டீஸ்பூன்
  3. சீஸ் துருவல்-1/8 கப்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, குடைமிளகாய்,பீன்ஸ்,காரட் சேர்த்து -1/2 கப்
  5. மிளகு தூள்-1/4 டீஸ்பூன்
  6. சில்லி ஃப்ளேக்ஸ்-1/4 டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. ஓரிகானோ-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய காய்கறிகள் அனைத்தும் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும்.அதனுடன் உப்பு மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பிரட்டின் ஓரங்களை கட் செய்து விட்டு வெண்ணெய் தடவிய கப் கேக் மவுல்டில் பிரட்டை அமுக்கி வைக்கவும்
  3. அந்த பிரட்டின் மேல் காய்கறி கலவையை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வைக்கவும்
  4. அதன் மேல் சீஸை தூவி ஓரிகானோ மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் தூவவும்
  5. ஓவனில் 180 டிகிரியில் ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை ( பிரட் ரோஸ்ட் ஆகும் வரை ) பேக் செய்யவும்.
  6. ஆறியதும் எடுத்து பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்