வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பொரிச்ச குழம்பு

Photo of Raw Banana Poricha Kulambu by Sowmya Sundar at BetterButter
976
1
0.0(0)
0

வாழைக்காய் பொரிச்ச குழம்பு

Aug-30-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பொரிச்ச குழம்பு செய்முறை பற்றி

வாழைக்காயுடன் வறுத்து அரைத்த தேங்காய் மசாலா மற்றும் புளி சேர்த்து செய்த சுவையான குழம்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய வாழைக்காய் ஒரு கப்
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. கடுகு 1 டீஸ்பூன்
  6. உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
  7. மிளகாய் வற்றல் 1
  8. கறிவேப்பிலை சிறிது
  9. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  10. வறுத்து அரைக்க:
  11. உளுத்தம் பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  12. மிளகாய்வற்றல் 3
  13. மிளகு ஒரு டீஸ்பூன்
  14. சீரகம் ஒரு டீஸ்பூன்
  15. தேங்காய் துருவல் கால் கப்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
  3. அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வாழைக்காயை வதக்கி புளி கரைசல்,உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நன்றாக வேக விடவும்
  4. காய் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா மற்றும் வெந்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்
  5. ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்