Photo of Aappam by Fathima Sujitha at BetterButter
263
0
0.0(0)
0

ஆப்பம்

Sep-12-2018
Fathima Sujitha
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பம் செய்முறை பற்றி

மெதுவான இரவுக்கு ஏற்ற உணவு ஆப்பம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 1 கப்
  2. புழுங்கல் அரிசி - 1 கப்
  3. தேங்காய் - 1/2 மூடி
  4. உளுந்து - 3 டேபிள் ஸ்பூன்
  5. சோடா மாவு - 1/2 டீஸ்பூன்
  6. சர்க்கரை - 2 டீஸ்பூன்
  7. எண்ணெய் - சுட்டெடுக்க தேவையான அளவு
  8. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. செய்முறை : 1. பச்சரிசி, புழுங்கல் அரிசி மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. 2. பின் க்ரைண்டரில் ஊற வைத்ததை சேர்த்து அரைக்கவும்.
  3. 3.அதனுடன் தேங்காய் சேர்க்கவும்.
  4. 4.கொஞ்ச, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும் .
  5. 5. நைஸ்ஸாக அரைத்து எடுக்கவும் .
  6. 6. பின் அரைத்து எடுத்த கலவையில் சர்க்கரை 2 டீஸ்பூன் ,சோடா உப்பு 1/2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து மாவு புளிப்பதற்கு வைக்கவும்.
  7. 7.காலையில் மாவு அரைத்து வைத்திருத்தால் இரவு உணவுக்கு புளித்து தயாராக இருக்கும் ஆப்ப மாவு .
  8. 8. ஆப்ப மாவு புளித்து சமைக்க எடுக்கும் போது தேவையான உப்பை சேர்க்கவும்.
  9. 9.ஆப்ப கடாயில் ஊற்றி சுட்டெடுத்தால் "மெதுவான ஆப்பம்" தயார்...!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்