கறி அடை | Mutton Adai in Tamil

எழுதியவர் Najeeba Refaye  |  13th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mutton Adai by Najeeba Refaye at BetterButter
கறி அடைNajeeba Refaye
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

2

0

கறி அடை recipe

கறி அடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutton Adai in Tamil )

  • மட்டன் 1/4 கிலோ
  • பல்லாரி 1/2 கிலோ
  • ப.மிளகாய் 2+ கருவேப்பிலை தே.அளவு
  • தேங்காய் பூ 1 1/2 கப்
  • வத்தல் தூள் 1 டீஸ்பூன்
  • இஞ்சி பூடு பேஸ்ட் 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் +உப்பு
  • கீரைப் பொடி 3 டீஸ்பூன்
  • அளவு அரிசி மாவு(ரைஸ்கப் 2)குட்டான் 3/4
  • ஆயில் 50 கிராம் + நெய் 100 கிராம்
  • முட்டை 1

கறி அடை செய்வது எப்படி | How to make Mutton Adai in Tamil

  1. செய்முறை :- மட்டனை கழுவி விட்டு குக்கரில் வத்தத்தூள், இஞ்சி பூடு பேஸ்ட், உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு சட்டியில் ஆயில் ஊற்றி பல்லாரியை நீள வாக்கில் வெட்டி எண்ணெயில் வதக்கவும். அதனுடன் உப்பு மஞ்சள்தூள், ப.மிளகாய், கருவேப்பிலை போட்டு பத்து நிமிடம் எண்ணெயில் வதக்கவும்.
  3. வதங்கிய வெங்காயத்துடன் தேங்காய் பூ, முட்டை, உப்பு, கீரைப்பொடி,அரிசி மாவு புரட்டி வைத்த கறி எல்லாவற்றையும் போட்டு, தண்ணீர் ஊற்றி புரட்டி, கெட்டியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. பின்னர் தவாவில் நெய் ஊற்றி மாவை ஊற்றி தீயைக் குறைத்து விடவும். கறி அடை ரெடி

எனது டிப்:

• எண்ணெய் நன்கு ஊற்றி பொரித்தால்தான் மொரு மொரு என்று இருக்கும். கலவை அதிக தண்ணீர் இல்லாமல் நார்மலாக இருக்க வேண்டும்.

Reviews for Mutton Adai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.