வீடு / சமையல் குறிப்பு / வெல்ல சுகியம்

Photo of Sweet sugiyam by Bhuvana Selvaraj at BetterButter
591
1
0.0(0)
0

வெல்ல சுகியம்

Oct-01-2018
Bhuvana Selvaraj
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெல்ல சுகியம் செய்முறை பற்றி

வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்ந்த ஊரில் பிறந்தேன் என்பதில் பெருமை எனக்கு.சுற்றிலும் சிறு குறு கிராமங்களை கொண்டு ,மையத்தில் அரண்மனை கம்பீரத்தோடு வீற்றிருக்கிறது சிவகங்கை சீமை. சுற்றிலும் கிராமங்கள் என்பதால் விவசாயமே பிரதானம். கிராமத்து பலகாரங்கள் இங்கு அதிக பிரபலம். பலகாரங்கள் பாரம்பரிய ருசியுடன் கிடைக்கும்.பெரும்பாலோர் கடைகளில்வாங்காமல் வீட்டில் தான் விசேஷங்களுக்கு செய்வார்கள். திருமணம் முடிந்து முதன்முறையாக மாமியார் வீட்டிற்கு மறுவீடு வரும் மருமகனுக்கு இந்த வெல்ல சுகியம் விருந்தில் அவசியம் வைப்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை பருப்பு200gram
  2. வெல்லம்400gram
  3. தேங்காய் துருவல்1/2கப்
  4. ஏலக்காய் தூள்
  5. பச்சரிசி 1டம்ளர்
  6. உளுந்து1 டம்ளர்
  7. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. பச்சரிசி 1டம்ளர்,உளுந்து 1டம்ளர் தனித்தனியே 40நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. ஊறவைத்த அரிசி உளுந்தை நன்றாக மைய அரைக்கவும். தண்ணீர் அதிகமாக ஊற்ற கூடாது.
  3. 200gramகடலைபருப்பை குழையவிடாமல் வேகவைக்கவும்
  4. வேகவைத்த பருப்பை மிக்சியில் அரைக்க வேண்டும்
  5. தேங்காயை துருவி வதக்கி வைத்து கொள்ளவும்
  6. அரைத்த கடலைபருப்புடன் , வதக்கிய தேங்காய் துருவல்,ஏலக்காய்பொடி மற்றும் வெல்லத்தை பொடித்து சேர்த்து பிசையவும்
  7. பிசைந்தை உருண்டைகளாக பிடித்து வைத்து கொள்ளவும்
  8. அரைத்தமாவில் இந்த உருண்டைகளை பிரட்டவும்
  9. பிரட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு சிம்மில் வைத்து பொறித்து எடுக்கவும்
  10. சுவையான சூடான வெல்ல சுகியம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்