வீடு / சமையல் குறிப்பு / காரைக்குடி வாழை பூ வெங்காய அடை அவியல்

Photo of Karaikudi plantain flower onion adai aviyal by Adaikkammai Annamalai at BetterButter
941
4
0.0(0)
0

காரைக்குடி வாழை பூ வெங்காய அடை அவியல்

Oct-05-2018
Adaikkammai Annamalai
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரைக்குடி வாழை பூ வெங்காய அடை அவியல் செய்முறை பற்றி

செட்டிநாடு செய்முறையில் செய்யப்படும் இந்த அடை மிகவும் பிரபலமானது. இரண்டு மணி நேரத்திற்குள் இந்த அடை மாவைத் தயாரித்து விடலாம். அதிலும் இதில் வாழைப்பூ சேர்த்து செய்வதனால் உடலுக்கு மிக ஆரோக்கியமானது, ஒரு வித்யாசமான ட்விஸ்ட் கூட , இதே கண்டிப்பாக செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப் பூ அடைக்கு தேவையான பொருட்கள்;
  2. புழுங்கல் அரிசி - 1 கப்
  3. துவரம் பருப்பு - 1 கப்
  4. கடலைப் பருப்பு - 1 கப்
  5. இஞ்சி - சிறு துண்டு (தோல் நீக்கி)
  6. பூண்டு - 4 பல்
  7. காய்ந்த மிளகாய் - 6
  8. பெருஞ்சீரகம் - 1 tsp
  9. சிறிய வாழைப்பூ ஒன்று (நரம்புகளை எடுத்து, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), 
  10. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), 
  11. எண்ணெய் - தேவையான அளவு
  12. உப்பு - தேவையான அளவு.
  13. அவியல்க்கு தேவையான பொருட்கள்
  14. புடலங்காய் – 1
  15. உருளைக்கிழங்கு - 2
  16. கேரட் – 2
  17. சீரகம் – 10 கிராம்
  18. தேங்காய்த் துருவல் – 1 கப்
  19. பச்சை மிளகாய் - 6
  20. கறிவேப்பிலை – சிறிது 
  21. புளிப்பில்லாத தயிர் – சிறிது
  22. தேங்காய் எண்ணெய் – வதக்க தேவையான அளவு 

வழிமுறைகள்

  1. அடை செய்முறை;
  2. அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும், இரண்டு மணி நேரம் ஊற விடவும். 
  3. முதலில், அரிசியை மிக்சியில் போட்டு, சிறிதுநேரம் ஓட விட்டு, பின் பருப்பு, இஞ்சி மற்றும் பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து, சற்று கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். 
  4. வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கி, பின் வாழைப்பூ சேர்த்து வதக்கி, மாவில் கொட்டி கலந்து கொள்ளவும். 
  5. தோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
  6. சுவையான சத்தான வாழைப்பூ வெங்காய அடை தயார்
  7. அவியல் செய்முறை;
  8. காய்கறிகளைத் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்து தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்
  9. சீரகம், தேங்காய், பச்சை மிளகாய் இவை மூன்றையும் அரைத்து எடுத்து கொள்ளவும், அரைத்த கலவையை வேக வைத்த காய்கறியுடன் ஒன்றாக சேர்த்து கலக்கி நன்றாக கொதி வந்த பிறகு இறக்கவும்
  10. பிறகு கறிவேப்பிலை, தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும், கடைசியா தேங்காய் எண்ணெயை விட்டுக் கலக்க வேண்டும் ,, சுவையான அவியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்