மஹலி கிழங்கு தயிர் ஊறுகாய் | Mahali Kizhangu Thayir Urugaai in Tamil

எழுதியவர் Neeru Srikanth  |  5th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mahali Kizhangu Thayir Urugaai by Neeru Srikanth at BetterButter
மஹலி கிழங்கு தயிர் ஊறுகாய்Neeru Srikanth
  • ஆயத்த நேரம்

    45

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    48

    மணிநேரம்
  • பரிமாறும் அளவு

    25

    மக்கள்

1

0

மஹலி கிழங்கு தயிர் ஊறுகாய் recipe

மஹலி கிழங்கு தயிர் ஊறுகாய் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mahali Kizhangu Thayir Urugaai in Tamil )

  • மேரினேட் செய்து சேமிப்பதற்கு:
  • மஹாலி கிழங்கு/இந்திய நன்னாரி வேர் – ¾ கிகி
  • மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  • உப்பு –சுவைக்கு
  • பரிமாறுவதற்கு:
  • தயிர் – 3 தேக்கரண்டி

மஹலி கிழங்கு தயிர் ஊறுகாய் செய்வது எப்படி | How to make Mahali Kizhangu Thayir Urugaai in Tamil

  1. மஹாலியை தண்ணீரில் ஊறவைக்கவும், அதில் மண் இருக்கும். நன்றாகக் கழுவவும்.
  2. அதனைச் சீவி அதில் கருப்புப் பகுதிகள் ஏதாவது இருந்தால் நீக்கவும். இதெல்லாம் அழுகியவை. தேர்ந்தெடுக்கும்போது இதெல்லாம் பார்க்கவேண்டியது, சில சமயங்களில் வெட்டும்போதுதான் பார்க்க நேர்கிறது.
  3. தோலை உரித்துவிடவும்.
  4. மஹாலியின் மத்தில் வெட்டி மத்தியில் காணப்படும் மொத்தமான தண்டுபோன்றப் பகுதியை நீக்கவும். இந்தத் தண்டு கடினமானதாக இருக்கும் சாப்பிட முடியாது.
  5. மஹாலியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  6. மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். 2 நாள்களுக்கு மூடிய பாத்திரத்தில் விட்டுவைக்கவும்.
  7. முதல் 2 நாள்களுக்கு நாளொன்றுக்கு ஒரு முறை கலக்கவும்.
  8. மேரினேட் செய்யப்பட்ட ஊறுகாய் தயார். காற்றுப் புகாத பாத்திரத்தில் நீங்கள் அதை சேமித்து வைக்கவும்.
  9. சாப்பிடுவதற்கு.
  10. உண்பதற்கு நறுக்கப்பட்ட மஹாலியில் இருந்து 2 தேக்கரண்டிகள் எடுத்து 3 தேக்கரண்டி தயிர் சேர்த்துக்கொள்ளவும். தேவைப்படும்போதெல்லாம் இதைக் கலந்துகொள்ளவும். 3 அல்லது 4 நாள்களுக்குள் பயன்படுத்தப்படவில்லை எனில் தயிர் துவர்ப்பாகிவிடும். அதனால் 2 நாளில் நாளொன்றுக்கு ஒரு முறை கலக்குவது நல்லது.

Reviews for Mahali Kizhangu Thayir Urugaai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.