வீடு / சமையல் குறிப்பு / மஹலி கிழங்கு தயிர் ஊறுகாய்

Photo of Mahali Kizhangu Thayir Urugaai by Neeru Srikanth at BetterButter
1892
1
5.0(0)
0

மஹலி கிழங்கு தயிர் ஊறுகாய்

Jul-05-2016
Neeru Srikanth
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2880 நிமிடங்கள்
சமையல் நேரம்
25 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 25

  1. மேரினேட் செய்து சேமிப்பதற்கு:
  2. மஹாலி கிழங்கு/இந்திய நன்னாரி வேர் – ¾ கிகி
  3. மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  5. உப்பு –சுவைக்கு
  6. பரிமாறுவதற்கு:
  7. தயிர் – 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மஹாலியை தண்ணீரில் ஊறவைக்கவும், அதில் மண் இருக்கும். நன்றாகக் கழுவவும்.
  2. அதனைச் சீவி அதில் கருப்புப் பகுதிகள் ஏதாவது இருந்தால் நீக்கவும். இதெல்லாம் அழுகியவை. தேர்ந்தெடுக்கும்போது இதெல்லாம் பார்க்கவேண்டியது, சில சமயங்களில் வெட்டும்போதுதான் பார்க்க நேர்கிறது.
  3. தோலை உரித்துவிடவும்.
  4. மஹாலியின் மத்தில் வெட்டி மத்தியில் காணப்படும் மொத்தமான தண்டுபோன்றப் பகுதியை நீக்கவும். இந்தத் தண்டு கடினமானதாக இருக்கும் சாப்பிட முடியாது.
  5. மஹாலியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  6. மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். 2 நாள்களுக்கு மூடிய பாத்திரத்தில் விட்டுவைக்கவும்.
  7. முதல் 2 நாள்களுக்கு நாளொன்றுக்கு ஒரு முறை கலக்கவும்.
  8. மேரினேட் செய்யப்பட்ட ஊறுகாய் தயார். காற்றுப் புகாத பாத்திரத்தில் நீங்கள் அதை சேமித்து வைக்கவும்.
  9. சாப்பிடுவதற்கு.
  10. உண்பதற்கு நறுக்கப்பட்ட மஹாலியில் இருந்து 2 தேக்கரண்டிகள் எடுத்து 3 தேக்கரண்டி தயிர் சேர்த்துக்கொள்ளவும். தேவைப்படும்போதெல்லாம் இதைக் கலந்துகொள்ளவும். 3 அல்லது 4 நாள்களுக்குள் பயன்படுத்தப்படவில்லை எனில் தயிர் துவர்ப்பாகிவிடும். அதனால் 2 நாளில் நாளொன்றுக்கு ஒரு முறை கலக்குவது நல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்