வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் தால் ஷோர்பா

Photo of Ridgegourd Dal Shorba by Sowmya Sundar at BetterButter
401
1
0.0(0)
0

பீர்க்கங்காய் தால் ஷோர்பா

Oct-22-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் தால் ஷோர்பா செய்முறை பற்றி

பீர்க்கங்காய், பாசிப்பருப்பு சேர்த்து செய்த தால் ஷோர்பா .இது ஒரு சிறந்த ஆரோக்கியமான அப்பிடைசர் ஆகும் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் துண்டுகள் 1 கப்
  2. பாசிப்பருப்பு 1/2 கப்
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. பச்சை மிளகாய் 1
  6. இஞ்சி ஒரு துண்டு
  7. பூண்டு 4 பல்
  8. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  9. சர்க்கரை 1/8 டீஸ்பூன்
  10. மிளகாய் வற்றல் 1
  11. உப்பு தேவையான அளவு
  12. மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
  13. சீரகம் 1 டீஸ்பூன்
  14. வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  15. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் பாசிப்பருப்பு , இஞ்சி மற்றும் பீர்க்கங்காயை தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக விடவும்
  2. வெந்ததும் நன்றாக மசித்து கொள்ளவும்.
  3. கடாயில் வெண்ணெய் போட்டு சீரகம் சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு, தக்காளி, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகு தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
  4. பின் வெந்த பீர்க்கங்காய் பருப்பை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்
  5. கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்