Photo of Thothal halwa by Mughal Kitchen at BetterButter
4159
0
0.0(1)
0

Thothal halwa

Nov-02-2018
Mughal Kitchen
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் 2
  2. மைதா மாவு 100 கிராம்
  3. ஜவ்வரிசி 50 கிராம்
  4. முந்திரி பருப்பு 50 கிராம்
  5. தேங்காய் எண்ணெய் 100 கிராம்
  6. கருப்பட்டி அரை கிலோ
  7. சீனி 100 கிராம்

வழிமுறைகள்

  1. மைதா மாவை நீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
  2. பின் மைதா மாவை வடிகட்டிக் கொள்ளவும்
  3. ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. தேங்காயை மிக்ஸியில் அரைத்து முதல் பால் மட்டும் எடுத்து வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்துக் கிளறவும்
  5. பின் ஜவ்வரிசி சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறவும்
  6. கருப்பட்டியை கொதிக்க வைத்து வடிகட்டி வைக்கவும்
  7. பின் மைதா மாவு கரைத்து ஊற்றி நன்கு கைவிடாமல் கிளறவும்.பின் கருப்பட்டி பாகு சேர்த்து கிளறவும்.பின் சீனி சேர்க்கவும்
  8. அடிப்பிடித்து விடாமல் மெதுவாக சிம்மில் வைத்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்
  9. இடையிடையே சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறவும்
  10. அல்வா பதம் வந்து சுருண்டு வரும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்
  11. ராம்நாடு ஸ்பெஷல் துதல் அல்வா ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Nov-10-2018
Raihanathus Sahdhiyya   Nov-10-2018

Nice sis, my fav....but as far I know thothal is made using rice flour.... Muscoth halwa is made using maida

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்