வீடு / சமையல் குறிப்பு / கொழுக்கட்டை ஜாமூன்

Photo of Kozhukattai jamun by Krishnasamy Vidya Valli at BetterButter
424
0
0.0(0)
0

கொழுக்கட்டை ஜாமூன்

Nov-04-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொழுக்கட்டை ஜாமூன் செய்முறை பற்றி

தீபாவளிக்கு எல்லோர் வீட்டிலும் செய்யப்படும் ஒரு இனிப்பு வகை குலாப்ஜாமூன். மைதாவில் செய்வார்கள். நான் சிறிது வித்யாசமாக கொழுக்கட்டை மாவில் முயற்சி செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஈர அரிசி திரித்தது /கொழுக்கட்டை மாவு / இடியாப்பமாவு 1/8 கப்
  2. கொதிக்கும் வெந்நீர் 1/8 கப் + 1 மேஜைக்கரண்டி
  3. கோவா 1/8 கப்
  4. கோதுமை மாவு ஒரு தேக்கரண்டி
  5. ஏலப் பொடி 2 சிட்டிகை
  6. பொடித்த சீனி 1 மேஜைக்கரண்டி
  7. முந்திரி பாதாம் பொடித்தது ஒரு தேக்கரண்டி
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்
  9. ஜீராவிற்கு தேவையானவை
  10. சீனி கால் கப்
  11. ஏலப் பொடி 2 சிட்டிகை
  12. எலுமிச்சைச் சாறு அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மாவை வெந்நீர் விட்டு நன்றாக கொழுக்கட்டை மேல்மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  2. அதோடு கோவா கோதுமைமாவு முந்திரி பாதாம் பொடித்தது பொடித்த சீனி ஏலப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. நன்றாக பிசைந்து நான்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரிக்கவும்
  5. ஒரு கடாயில் சீனி மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைய விடவும்
  6. பிசுக்கு பதம் வந்ததும் ஏலப்பொடி எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்
  7. பொரித்து வைத்த உருண்டைகளை சீனிபாகில் போட்டு இரண்டு முதல் நான்கு மணிநேரம் வரை ஊறவைத்து பின் பரிமாறவும்
  8. சுவையான கொழுக்கட்டை ஜாமுன் தயார் விருப்பப்பட்டால் பாதாம் பிஸ்தா துருவி அலங்கரிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்