வீடு / சமையல் குறிப்பு / பச்சை பிந்தி

Photo of Greens Sarvapindi by Swapna Sunil at BetterButter
274
61
4.5(0)
0

பச்சை பிந்தி

Jul-14-2016
Swapna Sunil
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தெலுங்கானா
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 3 கப் : அரிசி மாவு
  2. 2 கப்: தண்ணீர் + தேவையான அளவு
  3. 1 கப் : பொடியாக நறுக்கிய வெங்காயம்
  4. 1 கப் : பசலிக்கீரை
  5. 1/2 கப்: கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
  6. கொஞ்சம் கறிவேப்பிலை நறுக்கியது
  7. 10ல் இருந்து 12 எண்ணி்க்கை: பச்சை மிளகாய் நசுக்கியது
  8. 2 தேக்கரண்டி: எள்ளு
  9. சுவைக்கேற்ற அளவு உப்பு
  10. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டுப் பின்னர் அரிசி மாவைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. பின்னர் அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு கலவை கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  3. இதைச் சில நிமிடங்கள் அறை வெப்பத்தில் ஆறவிடவும்.
  4. அடுத்து நறுக்கிய பசலிக்கீரை, வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, எள்ளு ஆகியவற்றைச் சேர்த்துத் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இந்த மென்மையான மாவாக பிசைந்துகொள்ளவும்.
  5. மூடி, 10 நிமிடம் மாவை விட்டுவைக்கவும்.. பின்னர் மாவை 12 சம பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும்.
  6. இப்போது மாவு உருண்டையை ஒரு கிரீஸ் செய்யப்பட்ட பாத்திரத்தில் ரொட்டி மொத்தத்தில் செய்து சில துளிகள் எண்ணெயை முனைகளில் விடவும்.. இதை மிதமானச் சூட்டில் இரண்டு பக்கங்களும் வேகம்வரையில், பொன்னிற புள்ளிகள் தோன்றும்வரையில் வறுக்கவும்.
  7. ஒரு தட்டில் எடுத்து இந்தச் செயல்முறையை அனைத்தும் சமைக்கப்படும்வரை மேற்கொள்ளவும்.
  8. தெலுங்கானவில் பிரசித்தம்பெற்ற சர்வபிந்தி தயில் அல்லது உங்களுக்குப் பிடித்த சட்னி எதனோடும் உண்பதற்குத் தயார்.
  9. எளிமையான அதே சமயம் திருப்திகரமான!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்