மீன் குழம்பு | Fish Curry - Meen Kuzhambu in Tamil

எழுதியவர் Reni Miller  |  17th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Fish Curry - Meen Kuzhambu by Reni Miller at BetterButter
மீன் குழம்பு Reni Miller
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

138

0

மீன் குழம்பு recipe

மீன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Fish Curry - Meen Kuzhambu in Tamil )

  • மீன் - 200 கி
  • மசாலா சாந்துக்காக: சின்ன வெங்காயம் - 7-9 (தோரிக்கப்பட்டு இரண்டாக நறுக்கப்பட்டது)
  • தக்காளி - 1 மிகப் பெரிய அளவு (பொடியாக நறுக்கப்பட்டது)
  • கொத்துமல்லி இலைகள் - 3-4 கொத்து (பொடியாக நறுக்கப்பட்டது)
  • கறிவேப்பிலை - ஒரு சிறிய கொத்தில் இருந்து
  • தேங்காய் - பொடியாக நறுக்கப்பட்டது - 3 தேக்கரண்டி
  • பூண்டு - 5-6 சிறிய பற்கள் - நறுக்கப்பட்டது
  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு (விருப்பம் சார்ந்தது)
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  • கடுக - 1/4 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  • முழு மிளகு - 1/2 தேக்கரண்டி
  • ஓமம் - 1/4 தேக்கரண்டி (அல்லது குறைவாக)
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 1.5தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் . 1தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • குழம்புக்கு: புளி - ஒன்றல்லது இரண்டு பெரிய நெல்லிக்காய் அளவிலானது (ஒரு கப் வெந்நீரில் 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து சாறைப் பிழிந்துகொள்ளவும்)
  • உப்பு தேவையான அளவு
  • தாளிப்புக்கு: எண்ணெய் - 1 - 2 தேக்கரண்டி
  • கடுகு - 1/4 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - கொஞ்சம்

மீன் குழம்பு செய்வது எப்படி | How to make Fish Curry - Meen Kuzhambu in Tamil

  1. மசாலாவுக்காக: 2 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சேர்க்கவும். சூடானதும் மிளகு, கடுகு, பெருஞ்சீரகம், ஓமம், சீரகத்தைப் பொரிக்கவிடவும். கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து ஒன்றல்லது இரண்டு நிமிடம் வதக்கவும்.
  2. சின்ன வெங்காயத்தை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அதன்பிறகு தக்காளியை மஞ்சள், மல்லி, மிளகாய்த் தூள் ஆகியவற்றோடு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  3. சிம்மில் கலவையில் இருந்து எண்ணெய் கசியும் வரை சமைக்கவும்.
  4. அதன்பிறகு கொத்துமல்லி சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இறுதியாக தேங்காய் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  5. அடுப்பிலிருந்து கலவையை இறக்கி, ஆறவிட்டு சற்றே கரடு முரடாக அரைத்துக்கொள்ளவும்.
  6. புளியில் இருந்து சாறை பிழிந்துகொள்ளவும்.
  7. மீனை சுத்தப்படுத்தி கழுவிக்கொள்ளவும்.
  8. குழம்புக்கு: ஒரு பாத்திரத்தில் சாந்தையும் புளிச் சாறையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மிதமானச் சூட்டில் கலவை 4-5 நிமிடங்கள் வேகட்டும். உப்பு சரிபார்த்து தேவையானால் சேர்த்துக்கொள்ளவும்.
  9. அதன்பிறகு மீனைச்சேர்த்துக் கவனமாக கலந்துகொள்ளவும்.
  10. சிறு தீயில் அது 10-15 நிமிடங்கள் முழுமையாக வேகும்வரை வேகட்டும். அடிக்கடி கலக்கவேண்டாம், மீன் துண்டுத்துண்டாக உடைந்துவிடும். சிம்மில் மேலும் 2-3 நிமிடங்கள் இருக்கட்டும்.
  11. தாளிப்புக்காக வேறொரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி மற்றப் பொருள்களை வெடிக்கவிடவும்.
  12. தாளிப்பை குழம்பில் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

எனது டிப்:

இந்தக் குழம்பு எந்த வகையான மீனுக்கும் நன்றாக வரும், ஆனால் முள்ளுள்ளதின் ருசி சிறப்பாக இருக்கம், கொஞ்சம் பிளந்த பச்சை மிளகாயை குழம்புடன் சேர்க்கவும் தூக்கலானக் கார வகைக்காக.

Reviews for Fish Curry - Meen Kuzhambu in tamil (0)