Photo of RASMALAI ! by Ramani Thiagarajan at BetterButter
323
2
5.0(1)
0

RASMALAI !

Nov-13-2018
Ramani Thiagarajan
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மேற்கு வங்காளம்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொழுப்பு நிறைந்த பசும் பால்-1 லிட்டர்
  2. எலுமிச்சம் பழம் அல்லது பாலைத்திறித்ததும் கிடைக்கும் தண்ணீர்(வே வாட்டர் )
  3. சர்க்கரை 1/2 கிலோ
  4. குங்குமப்பூ 4 சிட்டிகை
  5. ரப்ரிக்கு தேவையான பால்-1 லிட்டர்
  6. ஆரோரூட் பவுடர் 2மேஜைக்கரண்டி
  7. பாதாம், பிஶ்தா பருப்புகள் ( சீவியது )

வழிமுறைகள்

  1. கொழுப்பு நிறைந்த பசும் பாலை பொங்கும் வரை நன்கு காய்ச்சவும்.
  2. சிறிது சூடு குறைந்ததும் அவே வாட்டரை சேர்க்கவும்.
  3. பால் திறிந்து வந்ததும் ஒரு மல் துணியில் வடிகட்டவும்.
  4. பிறகு கிடைக்கும் பன்னீரை தனியே எடுக்கவும்.
  5. அந்த பன்னீருடன் சிறிது சர்க்கரை,ஏலக்காய்த் தூள்,பொடித்த குங்குமப்பூ,ஆரோரூட் மாவு சேர்த்து உள்ளங்கையால் நன்கு தேய்த்து, குருனை இல்லாதவாறு பிசையவும்.
  6. உருண்டைகளாக செய்துக்கொள்ளவும்.
  7. ஒரு குக்கரில் ஒரு மடங்கு சர்க்கரைக்கு 8 மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  8. சர்க்கரைத் தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது தயாரித்த பன்னீர் உருண்டைகளை மெதுவாக போடவும்.
  9. குக்கரில் ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து வைத்து 8 நிமிடங்கள் வேகவிடவும்.
  10. குக்கர் நன்கு குளிர்ந்த பிறகு திறக்கவும்.
  11. பாலை நன்கு காய்ச்சி சுண்ட வைக்கவும்.
  12. காய்ச்சிய பாலுடன் ஊறிய குங்குமப்பூ,சர்க்கரை,ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  13. குக்கரில் இருந்து பன்னீர் உருண்டைகளை லகுவாக பிழிந்து காய்ச்சிய சுண்டிய குங்குமப்பூ பாலில் சேர்க்கவும்.
  14. சீவிய பாதாம்,பிஶ்தாகள் மேலும் குங்குமப்பூக்களால் அலங்கரிக்கவும்.
  15. இவ்வாறு சேர்க்கும் போது பாலும், பன்னீர் உருண்டைகளும் சூடாக இருக்கக்கூடாது.
  16. மிகவும் சுவையான ரஶ்மலாய் பண்டிகை கால சிறந்த உணவாகும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ramani Thiagarajan
Nov-13-2018
Ramani Thiagarajan   Nov-13-2018

ரஶ்மலாய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பண்டிகைக் கால சுவையான உணவு ஆகும்.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்