வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக் கீரை பொரியல்

Photo of Drumstick leaves poriyal by Jayasakthi Ekambaram at BetterButter
367
0
0.0(0)
0

முருங்கைக் கீரை பொரியல்

Nov-17-2018
Jayasakthi Ekambaram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக் கீரை பொரியல் செய்முறை பற்றி

முருங்கைக்கீரையும் பயித்தம் பருப்பும் சேர்த்து செய்யும் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கைக்கீரை மூன்று கைப்பிடி அளவு
  2. பயித்தம் பருப்பு 50 கிராம்
  3. வெங்காயம் ஒன்று
  4. கடுகு ஒரு ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  6. காய்ந்த மிளகாய் இரண்டு
  7. சமையல் எண்ணெய் 3ஸ்பூன்
  8. கல் உப்பு 1/2 ஸ்பூன்
  9. பூண்டு பற்கள் 5

வழிமுறைகள்

  1. முருங்கைக் கீரையை உருவி தண்ணீரில் அலசிக் கொள்ளவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்
  3. பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  4. பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும்
  5. காய்ந்த மிளகாயை போட்டு அது வதங்கியதும் முருங்கைக் கீரையை போட்டு வதக்கவும்
  6. பயித்தம் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும்
  7. லேசாக வேக வைத்த பயத்தம் பருப்பை கீரையுடன் சேர்க்கவும்
  8. உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்
  9. கீரை வெந்து தண்ணீர் சுண்டியதும் அடுப்பை ஆஃப் பண்ணவும்
  10. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்