வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் அவல் இனிப்பு

Photo of Coconut milk Aval sweet by Nazeema Banu at BetterButter
814
1
0.0(0)
0

தேங்காய் பால் அவல் இனிப்பு

Nov-21-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் அவல் இனிப்பு செய்முறை பற்றி

சுவையான அவல் ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு கெட்டி அவல் ஒரு கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. தேங்காய் அரை மூடி
  4. நெய் கால் கப்

வழிமுறைகள்

  1. அவலைக்கழுவி விட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  2. தேங்காயை துருவி தண்ணீர் விட்டு மிக்சியில் இட்டு அரைக்கவும்.
  3. அரை கப் திக்கான தே.பால் எடுத்து வைக்கவும்.
  4. ஒரு கப் அளவு இரண்டாம் பால் எடுக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து இரண்டாம் பால் ஒரு கப் சேர்த்து அவலைப் பிழிந்து சேர்த்து கிளறவும்.
  6. பால் வற்றி அவல் வெந்ததும் சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறவும்
  7. அதனுடன் முதல் பால் சேர்த்து நெய்யும் சேர்த்து கிளறவும்.
  8. எல்லாம் சுருண்டு வந்ததும் இறக்கி இலேசாக ஆறவிட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்