வீடு / சமையல் குறிப்பு / 5வகை பருப்பு வெந்தய கீரை கூட்டு

Photo of 5 types  dalmethi by Vani Harvish at BetterButter
358
0
0.0(0)
0

5வகை பருப்பு வெந்தய கீரை கூட்டு

Nov-26-2018
Vani Harvish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

5வகை பருப்பு வெந்தய கீரை கூட்டு செய்முறை பற்றி

பருப்பு மற்றும் வெந்தயக்கீரை வைத்து செய்யும் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெந்தயக்கீரை ஒரு கட்டு
  2. துவரம் பருப்பு கடலைப்பருப்பு பாசிப்பருப்பு மசூர் பருப்பு உளுந்து தலா 2 கரண்டி
  3. எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்
  4. பூண்டு 8 பல்
  5. நெய் மற்றும் எண்ணெய் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. ஜீரகம் 1 ஸ்பூன்
  8. மிளகாய்-2
  9. மிளகாய் வற்றல் பொடி காரத்திற்கு தேவையான அளவு
  10. மிளகாய்வற்றல் 2
  11. சாம்பார் பொடி வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம்
  12. வெங்காயம் ஒன்று
  13. தக்காளி-2
  14. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள எல்லா பருப்புகளையும் தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் 4 பூண்டு பல் தாளிக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. கழுவி நறுக்கிய வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும்
  5. பிறகு தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. மிளகாய் வற்றல் பொடி சேர்த்து வதக்கவும்
  7. சாம்பார் பொடி ருசிக்காக சேர்த்துக் கொள்ளலாம்
  8. பிறகு தண்ணீர் உப்பு வேகவைத்த பருப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்
  9. வாணலியில் நெய் ஊற்றி சீரகம் பூண்டு மிளகாய் வற்றல் தாளித்து அதில் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்