வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை வெல்லம் குழம்பு

Photo of Pirandai Jaggery gravy by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
632
2
5.0(0)
0

பிரண்டை வெல்லம் குழம்பு

Nov-28-2018
பிரசன்னா பிரசன்னா NT
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரண்டை வெல்லம் குழம்பு செய்முறை பற்றி

பிரண்டை மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு. இவற்றை வெல்லம்,புளி,எள், சேர்த்து குழம்பு வைத்தால் சுவை அருமையாக இருக்கும்.இது எனது அம்பிகா அம்மா சொல்லி தந்தது.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரண்டை ஒரு அரை கிலோ வரும் அளவு,
  2. வெங்காயம் 2,
  3. எண்ணெய் ஐம்பது கிராம்,
  4. புளி சிறிய எலுமிச்சை அளவு,
  5. அரை மூடி நறுக்கிய தேங்காய்,
  6. மூன்று ஸ்பூன் எள்,
  7. துருவிய வெல்லம் ஒரு பெரிய கைப்பிடி.

வழிமுறைகள்

  1. அரைகிலோ வரும் அளவு பிரண்டையை எடுத்து கொள்ளவும்.
  2. பிரண்டையை சுத்தம் செய்யும் முன் கைகளுக்கு நன்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து கொள்ளவும்.(நமச்சல் எடுக்காது)
  3. பிராண்டை தோலை உரித்து இவ்வாறு சிறு துண்டுகளாக எடுத்து கொள்ளவும்.
  4. உரித்த பிரண்டையை சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
  5. வெந்த பிரண்டையை இவ்வாறு நீரை வடித்து எடுத்துக்கொள்ளவும்(அந்த தண்ணீர் தேவை இல்லை நமைச்சல் எடுக்கும்)
  6. வெந்த பிரண்டையை இவ்வாறு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  7. மசாலா அரைக்க..எள், புளி, தேங்காய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
  8. இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள்,ஒரு ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து அரைக்கவும்.
  9. அனைத்தையும் இவ்வாறு மைய அரைத்து கொள்ளவும்.
  10. வெள்ளம் ஒரு பெரிய அளவு கைபிடித்து எடுத்து கொள்ளவும்.
  11. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  12. பின்பு அரைத்த பிரண்டை சாறு மற்றும் தேங்காய் விழுதையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
  13. சிறிது தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதி விடவும்.
  14. நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  15. கொதித்து திக்காக வரும் போது ருசி பார்த்து இறக்கவும்.
  16. சுவையான,உடலுக்கு ஆரோக்கியம் ஆன பிரண்டை வெல்லம் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்