வீடு / சமையல் குறிப்பு / தட்டைப்பருப்பு சாம்பார்(காராமணி)

Photo of Thattaiparuppu sambar by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
380
0
0.0(0)
0

தட்டைப்பருப்பு சாம்பார்(காராமணி)

Dec-17-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தட்டைப்பருப்பு சாம்பார்(காராமணி) செய்முறை பற்றி

துவரை பாசிபருப்புகளில் சாம்பார் சாப்பிட்டு இருபீர் கிராமத்து கல்யாண விருந்தில் இந்த பருப்பு சாம்பார்தான் கிட்டத்தட்ட முப்பதுவருடமுன் வரை இருந்தது அத்தை திருமணத்தில் சாப்பிட்ட ஞாபகம் தட்டைபயறை காலையில் ஊறவைத்து இரவு ஓலைபெட்டியில் கொட்டி வைக்கோல் வைத்து மூடினால் காலையில் பார்தால் முளைவிட்டிருக்கும் அதை நன்கு காயவைத்து திருகையில் திரித்து பருப்பாக்குவாங்க

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தட்டைபருப்பு 1கப்
  2. சாம்பார் பொடி 3ஸ்பூன்
  3. பூசணி கத்திரி தக்காளி முருங்கைகாய் நறுக்கியது
  4. சின்ன வெங்காயம் பூண்டு
  5. உப்பு
  6. புளிச்சாறு சிறிது
  7. எண்ணைய்1கரண்டி
  8. கடுகு
  9. கருவேப்பிலை மல்லி
  10. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
  11. சீரகம் தூள்1ஸ்பூன்
  12. பெருங்காயத்தூள்1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்பை 1/2மணிநேரம் ஊறவிடவும்
  2. ஊறியபருப்பில் மஞ்சள் சீரகம் பெருங்காயம் பூண்டு வெங்காயம் சேர்த்து குழையவேகவிட்டு எடுக்கவும்
  3. சாம்பார் பொடி உப்பு சேர்த்து காய்கறியுடன் வேகவிடவும் வேகும்போதே புளிச்சாறு சேர்க்கவும்
  4. நன்கு கொதித்து காய்வெந்ததும் வேகவைத்த பருப்பை கடைந்து ஊற்றவும்
  5. பாத்திரத்தில் எண்ணைவிட்டு கடுகு சோம்பு போட்டு வெடித்ததும் பெருங்காயதூள் மல்லி கருவேப்பிலை தாளித்துகொட்டு கொதிவந்ததும் இறக்கவும்
  6. கடைசியாக விருப்பப்பட்டால் 1ஸ்பூண் நெய் விடவும்
  7. சுவையான கிராமத்து சாம்பார் ரெடி இந்த சாம்பாருக்கு நிறைய காய் போடகூடாது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்