வீடு / சமையல் குறிப்பு / ஃபூல் தமீக்ஷ் பெரிய பீன்ஸ் மசாலா

Photo of Foul Tameez (FAVA BEANS)SPICY by Bena Aafra at BetterButter
1028
1
0.0(0)
0

ஃபூல் தமீக்ஷ் பெரிய பீன்ஸ் மசாலா

Dec-27-2018
Bena Aafra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஃபூல் தமீக்ஷ் பெரிய பீன்ஸ் மசாலா செய்முறை பற்றி

ஃபூல் தமீக்ஷ் ரொட்டி, நாண் உடன் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய பீன்ஸ்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. இஞ்சி பூண்டு விழுது
  4. தக்காளி பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய்-2
  6. பட்டை ஏலக்காய் தூள்
  7. கொத்தமல்லி இலை
  8. புதினா இலை
  9. மிளகாய் தூள்
  10. மஞ்சள் தூள்
  11. மல்லித்தூள்
  12. சீரகத்தூள்
  13. எலுமிச்சைச்சாறு
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. எண்ணெய் தேவைக்கேற்ப
  16. கறிவேப்பிலை
  17. தேங்காய்த்துருவல்

வழிமுறைகள்

  1. பீன்ஸ் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ,சேர்த்து வதக்கவும்.
  4. சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  5. கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்க்கவும்.
  6. பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  7. மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,பட்டை ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  8. நன்றாக மசாலா வதங்கியதும் பீன்ஸை சேர்த்து கிளறவும்.
  9. சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  10. பீன்ஸ் நன்றாக வெந்ததும் சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து விடவும்.
  11. இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்.
  12. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி விட்டு பரிமாறவும்.
  13. சுவையான ஃபூல் தமீக்ஷுடன் நாண், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்