வீடு / சமையல் குறிப்பு / காடை நெய் மசாலா

Photo of KAADAI Gee Masala by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
1175
0
0.0(0)
0

காடை நெய் மசாலா

Jan-04-2019
பிரசன்னா பிரசன்னா NT
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காடை நெய் மசாலா செய்முறை பற்றி

விருந்து நேரத்தில் இந்த காடை மசாலா சப்பாத்தி,சோறு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உரித்த இரண்டு முழு காடை
  2. வெங்காயம் இரண்டு
  3. தக்காளி இரண்டு
  4. பச்சைமிளகாய் 1
  5. இஞ்சி பூண்டு விழுது இரண்டு ஸ்பூன்
  6. பட்டை 2 துண்டு
  7. லவங்கம் 3
  8. நட்சத்திர மொக்கு 2
  9. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1 ஸ்பூன் கறி மசாலா
  11. 1 ஸ்பூன் மிளகு தூள்
  12. நெய் 3 ஸ்பூன்
  13. எண்ணெய் தேவையான அளவு
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் நறுக்கி கொள்ளவும்,பட்டை, லவங்கம் எடுத்து கொள்ளவும்.
  2. காடையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  3. வாணலியில் 3 ஸ்பூன் நெய்யை ஊற்றவும்
  4. நெய்யில் காடையை நன்கு பிரட்டவும்
  5. பிரட்டும் காடையில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  6. வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  7. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம் தாளிக்கவும்.
  8. வெங்காயம்,பச்சைமிளகாய்,கருவேப்பிலை தாளிக்கவும்.
  9. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  10. இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும்.மிளகாய் தூள், கறி மசாலா,சேர்த்து வதக்கவும்
  11. எண்ணெய் பிரிந்து வரும் போது தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
  12. தக்காளி வதங்கியதும் காடையை சேர்த்து நன்கு பிரட்டவும்.
  13. கறி வதங்கி வந்ததும்,தேவையான உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  14. தண்ணீர் வற்றி திக்காக வரும்போது மல்லித்தழை தூவி பரிமாறவும்
  15. சுவையான காடை நெய் மசாலா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்