வீடு / சமையல் குறிப்பு / நட்ஸ் பக்கோடா

Photo of NUTS PAKODA by Radha Balu at BetterButter
603
0
0.0(0)
0

நட்ஸ் பக்கோடா

Mar-31-2019
Radha Balu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நட்ஸ் பக்கோடா செய்முறை பற்றி

தெருக்கடைகளில் விற்கப்படும் பலவித பக்கோடா வகைகளில் இது ஒன்று!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முந்திரி பருப்பு - 25கிராம்
  2. பாதாம் பருப்பு - 20 கிராம் 
  3. கடலை மாவு - 100கிராம்
  4. அரிசி மாவு - 50கிராம்
  5. வெங்காயம் பெரியது- 2
  6. பச்சை மிளகாய் - 2 அல்லது 3
  7. இஞ்சி -  1 சிறுதுண்டு
  8. சமையல் சோடா - 1சிட்டிகை
  9. பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை 
  10. நெய் - 2 டீஸ்பூன்
  11. எண்ணெய், உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முந்திரி  பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
  2. பாதாமை வெந்நீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கவும்.
  3. வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  4. பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, உடைத்த முந்திரி, பாதாம்  பருப்பு, வெங்காயம்,  இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. சிறிது நெய்யை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
  7. சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  8. ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
  9. மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டு பிசிறினாற் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
  10. இனிமையான மாலை நேர தெருக்கடை உணவு மொறு மொறு முந்திரி பக்கோடா ரெடி!  

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்