வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் சியாவன்பிராஷ்

Photo of Amla Chyawanprash by Anshu Pande at BetterButter
1306
97
4.4(0)
0

நெல்லிக்காய் சியாவன்பிராஷ்

Nov-27-2016
Anshu Pande
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 2-3 கப் ஆம்லா அல்லது இந்திய நெல்லிக்காய்
  2. 1 கப் வெல்லம்
  3. 1 கப் தேன்
  4. 5ல் இருந்து 6 கப் நெய் அல்லது வெளுக்கப்பட்ட வெண்ணெய்
  5. 6-8 பச்சை ஏலக்காய்
  6. 1 தேக்கரண்டி முழு கரு மிளகு
  7. 1 இன்ச் இலவங்கப்பட்டை குச்சி
  8. 1-2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  9. 5-6 குங்குமப்பூத் தாள்

வழிமுறைகள்

  1. நெல்லிக்காயைக் கழுவி உங்கள் சமையல் துண்டினால் தட்டி உலர்த்தவும்.
  2. அடியில் ஒரு ரேக்குடன் ஒரு பிரஷர் குக்கரை எற்பாடு செய்து நெல்லிக்காயை அதனுள் சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து மூடவும். நெல்லிக்காயை 2 விசில்களுக்கு அல்லது 10 நிமிடங்கள் முழு பிரஷரில் வேகவைக்கவும். அடுப்பை நிறுத்தி பிரஷர் வெளியேறும்வரை அப்படியே இருக்கட்டும்.
  3. தண்ணீரை வடிக்கட்டி அதை எடுத்துவிடவும். கொதித்ததும் மிருதுவாகியிருக்கும், உங்களால் அதை எளிதில் வெளியே எடுக்க இயலும்.
  4. சாறை ஒரு பிளெண்டரில் போட்டு சாந்தாக அடித்துக்கொள்க. அரைப்பதை எளிதாக்க நீங்கள் ஒரு கரண்டி தண்ணீர் பயன்படுத்தலாம்.
  5. ஒரு கடாயில் கொஞ்சம் நெய் அல்லது வெளுக்கப்பட்ட வெண்ணெய் சேர்க்கவும். நெய்யில் நெல்லிக்காயைச் சேர்க்கவும். 10 நிமிடங்கள் அல்லது எண்ணெய் பிரிவதைப் பார்க்கும் வரை தொடர்ந்து வதக்கவும்.
  6. நெல்லிக்காய் சாந்தோடு வெல்லம் சேர்க்கவும். அது மிருதுவாக இருக்கும் போது ஒரு பெரிய கட்டியைப் போட முடிவுசெய்தேன். ஆனால் உங்கள் வெல்லம் பாறைபோல் இறுக்கமாக இருந்தால், அதைப் பொடி செய்து போடுவது நல்லதென்பேன்.
  7. தேன் சேர்க்கவும். அடர்த்தி, ஒட்டும் பதம், குழகுழப்பானத் தன்மையை அடையும் வரை வதக்கவும்.
  8. பச்சை ஏலக்காய், பெருஞ்சீரகம், முழு கருமிளகு, கொஞ்சம் குங்குமப்பூத் தாள், இலவங்கப்பட்டையை ஒரு உலர் கிரைண்டரில் போட்டு பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  9. அரைத்த மசாலாவை கடாயில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. மேலும் 5 நிமிடங்கள் எல்லாம் ஒருங்கிணையும்வரை வேகவைக்கவும்.
  10. ஆறட்டும், காற்றுப்புகாத ஒரு ஜாரில் மாற்றிக்கொள்ளவும். ஒரு கப் பாலுடன் ஒரு முழு கரண்டி தினமும் சாப்பிடவும், குளிர்காலத்தில் ஆரோக்கியமும், நோய் நொடியில்லாமலும் இருப்பீர்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்