பலவண்ண சாண்ட்விச் டோக்லா | Multi colour sandwich dhokla in Tamil

எழுதியவர் Ruchi Shah  |  22nd Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Multi colour sandwich dhokla by Ruchi Shah at BetterButter
பலவண்ண சாண்ட்விச் டோக்லாRuchi Shah
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1750

0

Video for key ingredients

 • How to make Idli/Dosa Batter

பலவண்ண சாண்ட்விச் டோக்லா recipe

பலவண்ண சாண்ட்விச் டோக்லா தேவையான பொருட்கள் ( Ingredients to make Multi colour sandwich dhokla in Tamil )

 • 2 கப் அரிசி
 • 1/2 கப் உளுந்து
 • 1/2 கப் பீட்ரூட் சாந்து (சிவப்பு அடுக்கிற்கு)
 • 1/2 கப் புதிய கொத்துமல்லி புதினா சட்னி (பச்சை அடுக்கிற்கு)
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் (மஞ்சள் அடுக்கிற்கு)
 • 1 கப் தயிர் (புதியது ஆனால் புளிக்காதது)
 • 1 கப் பச்சை கொத்துமல்லி புதினா சட்னி இடைப்பட்ட அடுக்குகளில் பயன்படுத்துவதற்கு
 • ஈனா - 1 பேக்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 3 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரண்டி கடுகு
 • 1 தேக்கரண்டி எள்
 • 1/2 தேக்கரண்டி பெருங்காயம்
 • 1-2 காய்ந்த மிளகாய்
 • 1-2 தேக்கரண்டி நறுக்கிய புதிய கொத்துமல்லி
 • கொஞ்சம் கறிவேப்பிலை

பலவண்ண சாண்ட்விச் டோக்லா செய்வது எப்படி | How to make Multi colour sandwich dhokla in Tamil

 1. அரிசியையும் உளுந்தையும் எடுத்து நன்றாகக் கழுவி போதுமானத் தண்ணீரில் 4-5 மணி நேரம் ஊறவைத்துக் கூடுதல் தண்ணீரை வடிக்கட்டவும். தயிர் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும். மாவுப் பதம் சற்றே அடர்த்தியாக இருக்கவேண்டும்.
 2. இந்த மாவை ஒரு வெப்பமான இடத்தில் குறைந்தபட்சம் 5-6 மணி நேரம் வைக்கவும். இந்த மாவு வழக்கமாக இட்லி மாவு போல் உப்பாது, இருந்தாலும் பிரச்சினையில்லை, அது சரியாக வரும்.
 3. டோக்லா மாவை நன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு பகுதி மாவை எடுத்து உப்பு சேர்த்து 2-3 தேக்கரண்டி தண்ணீர் பீட்ருட் சாந்தைச் சேர்க்கவும். ஆவி வரும்போது ஒரு கரண்டி ஈனோவை மாவில் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
 4. இப்போது உடனே இந்த மாவைச் சூடான எண்ணெய் தடவியத் தட்டில் ஊற்றவும். மூடியிட்டு மூடி 6-8 நிமிடங்கள் வேகவைக்கவும். இதன் பின்னர், மூடியைத் திறந்து டோக்லா வெந்திருந்தால் சற்றே அடர்த்தியான பச்சை சட்னியை அதன் மீது ஊற்றவும், நன்றாகப் பரவச் செய்து மூடியிட்டு மூடவும்.
 5. இன்னொரு பகுதி மாவை எடுத்து உப்பு சேர்த்து 2-3 தேக்கரண்டி தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும். கலந்து சட்னி அடுக்கை ஊற்றவும். மூடியிட்டு மூடி 8-9 நிமிடங்கள் சமைக்கவும். டோக்லாவை எடுப்பதற்கு முன் பல்குத்தும் குச்சி சோதனையைச் செய்யவும்.
 6. பல்குத்தும் குச்சி சுத்தமாக வந்தால் தட்டை வெ ளியில் எடுத்து முற்றிலுமாக ஆறவிடவும். இந்த சமயத்திற்கும் இன்னொரு 2 அடுக்குகளைத் தயார் செய்துகொள்வோம். ஒரே அளவுள்ள தட்டுகளை நேர்த்தியான ஒருங்கிணைப்பிற்காக எடுக்க முயற்சிக்கவும்.
 7. மாவின் ஒரு பகுதியை எடுத்து, உப்பு சேர்த்து 2-3 தேக்கரண்டி தண்ணீர், பச்சை சட்னி சேர்த்து, நன்றாகக் கலக்கவும். ஈனோ சேர்த்து எண்ணெய் தடவியச் சூடானத் தட்டில் ஊற்றவும். மூடியிட்டு மூடி 5-6 நிமிடங்கள் வேகவைக்கவும். மாவின் ஒரு பாகத்தை எடுக்கவும்.
 8. உப்பு சேர்த்து, 2-3 தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஈனோ சேர்த்து பச்சை அடுக்கை ஊற்றவும். மூடியிட்டு மூடி 7-8 நிமிடங்கள் வேகவைக்கவும். பல்குத்தும் குச்சி சோதனையைச் செய்து தட்டை எடுத்து முழுமையாக ஆறவிடவும்.
 9. இப்போது ஒருங்கிணைக்கவும்: ஒரு பெரிய தட்டை எடுத்து, பேக் செய்த கேக்குகளுக்குச் செய்வதுபோல் கவனமாக டோக்லா தட்டுகளைத் திருப்பவும். பின்பக்கத்தில் தட்டினால் வெளியே வரும். நான் வெள்ளை அடுக்கில் சிறிது வெண்ணெய் தடவி பச்சை மற்றும் மஞ்சள் அடுக்குகளை வைத்தேன்.
 10. வெண்ணெய் தடவுவதால் டோக்லா நன்றாக ஒட்டிக்கொள்ளும், சுவைக்கு ஈரத் தன்மையைக் கொடுக்கும். இந்த நிலையில் 1-2 நிமிடங்கள் மைக்ரோ ஓவனில் வைக்கவும் அல்லது 3-4 நிமிடங்கள் சூடான ஸ்டீமரில் வைக்கவும். (இது விருப்பம் சார்ந்தது, கட்டாயமில்லை) இப்போது டோக்ளாவை இறுகச் செய்யவும்.
 11. ஒரு கடாயில் எண்ணெய் எடுதது கடுகு சேர்த்து அது வெடிக்க ஆரம்பித்ததும். சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, எள் சேர்க்கவும். பெருங்காயம் செர்த்து இந்த தாளிப்பை டோக்லாவில் பரப்பவும். இப்போது ஒரு பெரிய கூரான கத்தியால் டோக்லாவை தேவையான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும். சதுரம் அல்லது டயமண்ட்.
 12. கொத்துமல்லி தூவி பரிமாறவும். பச்சை கொத்துமல்லி சட்னி அல்லது டீ/காபி அல்லது தக்காளி கெச்சப்போடு பரிமாறவும்.

Reviews for Multi colour sandwich dhokla in tamil (0)