கரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா) | Karele ka Bharta (Kalara Bharta/Bittergourd bharta) in Tamil

எழுதியவர் sweta biswal  |  21st Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Karele ka Bharta (Kalara Bharta/Bittergourd bharta) by sweta biswal at BetterButter
கரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா)sweta biswal
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

731

0

கரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா) recipe

கரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா) தேவையான பொருட்கள் ( Ingredients to make Karele ka Bharta (Kalara Bharta/Bittergourd bharta) in Tamil )

 • 2 நடுத்தர அளவுள்ள பாகற்காய்
 • 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
 • 2 பச்சை மிளகாய்
 • 1/2 தேக்கரண்டி பஞ்ச பூதனா (ஐந்து-பூரண்)
 • 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
 • 1-2 பூண்டு பற்கள்
 • 1 தேக்கரணடி எலுமிச்சை சாறு (விருப்பம் சார்ந்தது)
 • 1/3 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • சுவைக்கேற்ற உப்பு

கரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா) செய்வது எப்படி | How to make Karele ka Bharta (Kalara Bharta/Bittergourd bharta) in Tamil

 1. பாகற்காயை நன்றாகக் கழுவி இரண்டாக நறுக்கிக்கொள்க. இவற்றை பிரஷர் குக்கரில் 1/2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் உடன் சேர்க்கவும். 2-3 விசில்களுக்கு வேகவைக்கவும். ஆவி வரும்வரை காத்திருக்கவும். தண்ணீரை வடிக்கட்டி எடுத்துவைக்கவும்.
 2. பாகற்காயை பச்சை மிளகாய் உப்புடன் மசிக்கவும். வெங்காயத்தை நடுத்தர அளவில் நறுக்கிக்கொள்க.
 3. கடாயை எடுத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் புகைய ஆரம்பித்ததும், பஞ்ச பூதனாவை வெங்காயத்தோடு சேர்க்கவும். வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும்.
 4. இப்போது மசித்த பாகற்காயைச் சேர்த்து 6-7 நிமிடங்கள் அல்லது பழுப்பு நிறமாகும்வரை வதக்கவும்.
 5. அடுப்பை நிறுத்திவிட்டு எலுமிச்சை சாறு, நசுக்கிய பூண்டை சேர்க்கவும். ஒன்றாகக் கலந்து ரொட்டியுடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Karele ka Bharta (Kalara Bharta/Bittergourd bharta) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.