வீடு / சமையல் குறிப்பு / கணவை மீன் தேங்காய் கூட்டு (கணவை துவரன்)

Photo of Squid fish by prashanthy Gopal at BetterButter
3126
4
0.0(0)
0

கணவை மீன் தேங்காய் கூட்டு (கணவை துவரன்)

Oct-04-2017
prashanthy Gopal
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கணவை மீன் தேங்காய் கூட்டு (கணவை துவரன்) செய்முறை பற்றி

ரொம்ப நல்ல ருசியான மீன் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கணவை மீன் 250 கிராம்
  2. தேங்காய் 1/2 கப்
  3. சமையல் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி, பூண்டு பேஸ்ட் 1/2 தேக்கரண்டி
  5. சீரகம் 1/2 தேக்கரண்டி
  6. கடுகு 1/2 தேக்கரண்டி
  7. சோம்பு 1/2 தேக்கரண்டி
  8. பட்டை 1
  9. ஏலக்காய் 2
  10. வத்தல் மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  11. மிளகு தூள் ஒரு சிட்டிகை (ருசி குடுக்கறதுக்கு மட்டும்)
  12. பச்சைமிளகாய் 2
  13. மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
  14. கருவேப்பிலை 3 கொத்து
  15. மல்லியிலை 1/4 கப்
  16. தக்காளி 1
  17. பெரிய வெங்காயம் 1
  18. கரம் மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
  19. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கனவா மீனை நன்காக கழுவி மீடியம் அளவுக்கு கட் பண்ணி வைக்க வேண்டும்
  2. அதன்பின் ஒரு வானலில் 4 கப் தண்ணீர் ஊத்தி அதிலில் மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்
  3. கொதித்துக்கொண்டு இருக்கும்போதே மீனையும் போட்டு வேக வைக்கவும்
  4. 15 நிமிடம் வேக வெண்டும்
  5. அப்புறமாக மிக்ஸி ஜாரில் தேங்காய், வத்தல் மிளகு தூள் (வத்தல் முளகு 5), மஞ்சள் தூள், சோம்பு, சீரகம் போட்டு தண்ணீர் வீடாமல் நல்ல அரைத்து விட வேண்டும்.
  6. இனி ஒரு கடாயில் 3 மேஜைகரண்டி சமைக்கும் எண்ணெய் ஊத்தி , எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பட்டை, ஏலக்காய் போட்டு வதக்கவும்
  7. அதன்பின் வெங்காயம் , கருவேப்பிலை, மல்லியிலை போட்டு 3 நிமிடம் வதக்கவும்
  8. அப்புறமாக தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும் 3 நிமிடம் தக்காளியும் வதங்கிய பின் கனவா மீனையும் போட்டு கொஞ்சமாக உப்பையும் போட்டு வதக்கவும்
  9. இனி அரைத்து வைத்த தேங்காய் மசாலையும் போட்டு கிளறி கொடுக்க வேண்டும்
  10. 3 நிமிடம் மூடி வைத்து நன்காக கிளறி கொடுக்கவேண்டும்
  11. கடைசியாக மிளகு தூள், கரம் மசாலா தூள் போட்டு கொஞ்சமாக தண்ணீர் தளித்து கிளறி கொடுக்க வேண்டும்
  12. அதன் பிறகு 5 நிமிடம் மூடி வைத்த பின் ருசியான கனவா மீன் துவரனை பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்