வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு

Photo of Coconut milk chicken gravy by prashanthy Gopal at BetterButter
706
3
0.0(0)
0

தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு

Oct-09-2017
prashanthy Gopal
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு செய்முறை பற்றி

இது முழுவதும் தேங்காய் பாலில் செய்யும் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் 500 கிராம்
  2. எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் 1 1/2 கப்
  4. எலுமிச்சை ஜூஸ் 1 தேக்கரண்டி
  5. கருவேப்பிலை 1 கொத்து
  6. தக்காளி 1
  7. உப்பு 2 தேக்கரண்டி (தேவையான அளவுக்கு)
  8. மல்லியிலை 1/2 கப்
  9. பட்டை 2
  10. ஏலக்காய் 2
  11. கிராம்பு 1
  12. சோம்பு 1/2 தேக்கரண்டி
  13. பிரிஞ்சி இலை 1
  14. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 மேஜைக்கரண்டி
  15. இஞ்சி பூண்டு நறுக்கியது 2 தேக்கரண்டி
  16. தேங்காய் பல் சின்னதாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  17. பச்சைமிளகாய் 2
  18. மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  19. வத்தல் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  20. மஞ்சள் தூள்1/2 தேக்கரண்டி
  21. கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டி
  22. மல்லி தூள் (தனியா) 2 மேஜைக்கரண்டி
  23. தேங்காய் பால் 3 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்
  2. அதன்பின் சுத்தம் செய்த சிக்கனை போட்டு எலுமிச்சை சாறு ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு மஞ்சள் தூள் போட்டு, கொஞ்சமாக உப்பும் சேர்த்து 1 கப் கடைசியாக எடுத்த தேங்காய் பாலும் விட்டு வேக வைக்கவும்
  3. அப்புறமாக தேங்காய் பால் எடுக்கும்போது சோம்பும், தேங்காயும் சேர்த்து அரைத்து பால் எடுக்கவும்.
  4. சிக்கன் வெந்து கொண்டுருக்கும் நேரத்தில் ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி சின்ன வெங்காயம், கருவேப்பிலை, மல்லியிலை, தக்காளி, நறுக்கிய இஞ்சி பூண்டு போட்டு நல்ல வதக்கவும்
  5. பின் சிக்கன் வெந்து கொண்டிருக்கும் கடாயில் வதங்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளியை போட்டு கிளறி கொடுக்கவும்
  6. அப்புறமாக ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைக்கவும் சூடான பின் கரம் மசாலா தூள், மல்லி தூள் (தனியா தூள்), மிளகு தூள், வத்தல் முளகு தூள் போட்டு 2 நிமிடம் வறுக்கவும். இந்த வறுத்த மசாலா தூளையும், இரண்டாவது தேங்காய் பாலும் ஊற்றி கொஞ்சமாக உப்பும் சேர்த்து மூடி வைக்கவும் .
  7. 5 நிமிடம் ஆன பின் மூன்றாவது பாலும் விட வேண்டும்
  8. கடைசியாக தேங்காய்யும் எண்ணெயில் வறுத்து குழம்பில் போடவும்
  9. கொஞ்சமாக கொதித்து கொண்டே இருக்க வேண்டும்.
  10. 10 நிமிடம் ஆன பின் குழம்பு நல்ல தண்ணீர் இல்லாமல் தேங்காய் பால் திரட்டி வந்து நிற்கும் தருணத்தில் இறக்கி மூடி வைக்கவும்.
  11. இப்போது சுவையான தேங்காய் பால் சிக்கன் குழம்பு ரெடி. மசாலா தூளை வறுத்து போட்டால் நல்ல மணவும், பிரவுன் கலரில் குழம்பும் கிடைக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்