வீடு / சமையல் குறிப்பு / நாகர்கோவில் பிரண்டை துவையல்

Photo of Nagercoil pirandai thovayal by Krishnasamy Vidya Valli at BetterButter
497
6
0.0(0)
0

நாகர்கோவில் பிரண்டை துவையல்

Oct-24-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நாகர்கோவில் பிரண்டை துவையல் செய்முறை பற்றி

நாகர்கோவிலில் முன்னோர்கள் திதியன்று செய்யப்படும் துவையல் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இளம் நார் இல்லா பிரண்டை பாதி விரல் அளவில் நறுக்கியது - 1/2 கப்
  2. கருவேப்பிலை - 4 ஆர்க்கு
  3. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  4. எள்ளு - 1 தேக்கரண்டி
  5. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  6. இஞ்சி - 2 சிறிய துண்டு
  7. உப்பு - 3/4 தேக்கரண்டி
  8. புளி - ஒரு சிறிய துண்டு
  9. தாளிக்க கடுகு உளுத்தம்பருப்பு தலா அரைக்கரண்டி
  10. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  11. தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாய் (optional ) - 2 தேக்கரண்டி தேங்காய் துருவல் மற்றும் ஒரு பச்சை மிளகாய்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் எள்ளை வறுத்துக்கொள்ளவும்
  2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம்பருப்பு வறுத்துக்கொள்ளவும்
  3. பிரண்டையை தனியாக எண்ணெய்விட்டு வதக்கிக்கொள்ளவும்
  4. கறிவேப்பிலை மற்றும் இஞ்சியையும் வதக்கவும்
  5. எல்லாவற்றையும் உப்பு வெல்லம் புளியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  6. எண்ணெய்யில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கவும்
  7. ஜீரணத்திற்கு மிகவும் நல்ல பிரண்டை துவையல் தயார்
  8. விருப்பப்பட்டால் தேங்காய்துருவல் மற்றும் பச்சைமிளகாய் (வதக்க தேவையில்லை) அரைக்குபோது சேர்த்து அரைத்துகொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்