வீடு / சமையல் குறிப்பு / மணத்தக்காளி கீரை சட்டினி

Photo of BLACK NIGHT SHADE LEAF CHUTNEY by Kalai Rajesh at BetterButter
398
6
0(0)
0

மணத்தக்காளி கீரை சட்டினி

Oct-25-2017
Kalai Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மணத்தக்காளி கீரை சட்டினி செய்முறை பற்றி

மணத்தக்காளி கீரையை எங்கள் வீட்டில் சுக்கிட்டி கீரை என்றும் அழைப்போம்.என் பாட்டி சமையலில் எனக்கு மிகவும் பிடித்தது இது தான்.. ராகி களியுடன் இதை சேர்த்து என் தாத்தா எனக்கு ஊட்டி விடுவார். இந்த செடியில் உள்ள பழத்தை விரும்பாதவரே இருக்கமாட்டார் .பல மருத்துவம் நிரைந்தது இது.இட்லி தோசை சாதம் எவ்லாவற்றிற்கும் ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • భారతీయ
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நன்றாக கழுவி சுத்தம் செய்த மணத்தக்காளி இலை மட்டும் - 2 கை அளவு
  2. சின்ன வெங்காயம்- 10 (அளவானது)
  3. பூண்டு - 4 அ 5 பல் (அளவானது)
  4. வர மல்லி - 1/4 தேக்கரண்டி
  5. சீரகம் - 1/8 தேக்கரண்டி
  6. உளுந்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
  7. கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
  8. கருப்பட்டி உடைத்தது - 2 மேசைக்கரண்டி
  9. பச்சை மிளகாய்- 1 அளவானது
  10. வர.மிளகாய்- 2 அளவானது
  11. புளி - மிக சிறிதளவு
  12. உப்பு- தேவையான அளவு
  13. எண்ணெய்- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீரை இலைகளை சுத்தம் செய்ய வேண்டும்.அதில் உள்ள காய் மற்றும் பூக்களை சேர்க்க கூடாது.
  2. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்தம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  3. அதன் பின் பச்சை மிளகாய் , வர மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. பொன்னிறமாக வதக்கிய பின் மல்லி சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  5. வதக்கிய பின் கடைசியாக கீரையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. கலவை நன்றாக ஆறிய பின் ,புளி கருப்பட்டி சேர்த்து, அம்மிக்கல்லில் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து அரைக்கவும் அல்லது மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்