காபுலி புலாவ் | Kabuli Pulao in Tamil

எழுதியவர் Ruchira Hoon  |  5th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kabuli Pulao by Ruchira Hoon at BetterButter
காபுலி புலாவ்Ruchira Hoon
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  75

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

418

0

காபுலி புலாவ் recipe

காபுலி புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kabuli Pulao in Tamil )

 • மட்டன் அல்லது பீஃப் – 1 1/2 கிலோ பெரிய துண்டுகளாக நறுக்கப்பட்டது
 • சிக்கன் அல்லது மட்டன் ஸ்டாக் 1 கப்
 • பாஸ்மதி அரிசி 2 1/2 கப்
 • வெங்காயம் 2 நறுக்கப்பட்டது
 • கரம் மசாலா - 1 தேக்கரண்டி
 • சீரகம் – ½ தேக்கரண்டி
 • குங்குமப்பூ – ½ தேக்கரண்டி
 • உப்பு – 1 தேக்கரண்டி
 • சர்க்கரை 1 தேக்கரண்டி
 • எண்ணெய் - 3 தேக்கரண்டி
 • தண்ணீர் 4-5 கப்
 • பிஸ்தா பருப்பும் பாதாம் பருப்பும் கழுவப்பட்டது 1 கப்
 • உலர் திராட்சைகள் 1 கப்
 • கேரட் 2 மெலிதாக நறுக்கப்பட்டது
 • 1 தேக்கரண்டி எண்ணெய் கூடுதலாக

காபுலி புலாவ் செய்வது எப்படி | How to make Kabuli Pulao in Tamil

 1. அரிசியைத் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து வைக்கவும்.
 2. ஒரு பெரிய சாஸ் பாத்திரத்தில் வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். இறைச்சி, குங்குமப்பூ, கரம் மசாலா, உப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும். கறியின் பக்கங்களிலிருந்து எண்ணெய் கசியும்வரை ஏறக்குறைய 20 நிமிடங்கள் வறுக்கவும்.
 3. தண்ணீர் சேர்த்து கறியை மிருதுவாக சமைக்கவும். தேவைப்பட்டால் அதிக தண்ணீர் சேர்க்கவும்.
 4. கறியை சமைக்கும்போது, ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி கேரட்டைக் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து மிருதுவாகும்வரை வதக்கி எடுத்து வைக்கவும். உலர் திராட்சை, பாதாம், பிஸ்தாக்களையும் அப்படியே செய்க. வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
 5. கறி வெந்ததும், வானலியில் இருந்து கறியை எடுத்துவிடவும். இருப்போடு அரிசியையும் உப்பையும் கூடுதலான கறித் தண்ணீரையும் சேர்க்கவும். அரிசி பஞ்சுபோல் ஆகும்வரை வேகவைக்கவும். இது 15 நிமிடங்கள் பிடிக்கும்.
 6. ஓவனில் வைக்கக்கூடிய பாத்திரத்திற்கு மாற்றவும். கறியை அதில் சேர்த்து அதற்குமேல் உலர் பழங்கள், பருப்புகள் மற்றும் கேரட்டைச் சேர்க்கவும். 10 நிமிடங்களுக்கு 200 டிகிரி செண்டிகிரேட்டில் பேக் செய்யவும்.
 7. சலாது சட்னியோடு பரிமாறுக.

Reviews for Kabuli Pulao in tamil (0)