வீடு / சமையல் குறிப்பு / ஆமணக்கு இட்லி & தோசை ( குஷ்பூ இட்லி)

Photo of Castor Oil Idly and Dosa ( Kushboo Idly) by Happy Home Maker-Tamil at BetterButter
6343
4
0.0(0)
0

ஆமணக்கு இட்லி & தோசை ( குஷ்பூ இட்லி)

Nov-06-2017
Happy Home Maker-Tamil
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆமணக்கு இட்லி & தோசை ( குஷ்பூ இட்லி) செய்முறை பற்றி

ஆமணக்கு விதைகள் சேர்த்து அரைத்து கோடை காலத்தில் செய்யப்படும் பழங்கால உணவு இது. உடல் சூடு நீக்கவும், குடலிலுள்ள கழிவுகளை அகற்றவும் உதவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி - 4 கப்
  2. உளுந்து -1 கப்
  3. ஆமணக்கு விதை - 3 அல்லது விளக்கெண்ணெய்- 2 மேசைக்கரண்டி
  4. உப்பு -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி, உளுந்து களைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்த ஆமணக்கு விதை தோல் நீக்கி சேர்த்து இட்லிக்கு அரைப்பது போல் அரைக்கவும்.
  3. விதை கிடைக்கவில்லை என்றால் 2மேசைக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்க்கவும்.
  4. 6-8மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. இட்லி தட்டில் துணி போட்டு இட்லி ஊற்றி 7நிமிடம் வேகவைக்கவும்.
  6. மெத்தென்றிறுக்கும் ஆமணக்கு இட்லி அல்லது குஷ்பூ இட்லி தயார்.
  7. இரும்பு தொசைக்கல்லை சூடு செய்து இதே மாவை சற்று கனமான தோசைகளாக ஊற்றவும்.
  8. சுற்றிலும் விளக்கெண்ணெய் விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.
  9. சுவையான மிருதுவான ஆமணக்கு தோசை தயார்.
  10. பூண்டு சட்னி இதற்கு பாரம்பரியமாக தொட்டுக் கொள்ள செய்வார்கள். ஆமணக்கு குளிர்ச்சியை பூண்டு சூடு சமன் செய்யும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்