வீடு / சமையல் குறிப்பு / நார்த்தங்காய் ஊறுகாய்

Photo of Citron pickle by Asiya Omar at BetterButter
2195
4
0.0(0)
0

நார்த்தங்காய் ஊறுகாய்

Nov-07-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

நார்த்தங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

பாரம்பரிய முறையில் நார்த்தங்காய் உப்பு வைப்பது,எப்படி ஊற வைப்பது,ஊறுகாய் போடும் முறை,இந்த முறையில் செய்து பாருங்க வருஷத்திற்கும் உபயோகிக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • கடினம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நார்த்தங்காய் - 5 (அரைக்கிலோ)
  2. கல் உப்பு தேவைக்கு
  3. வறுத்து பொடிக்க:-
  4. மிளகாய் வற்றல் -6
  5. வெந்தயம் -1/2 டீஸ்பூன்
  6. கடுகு -1/2 டீஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
  8. பெருங்காயம் - சிறிய துண்டு
  9. சிறிது எண்ணெய் விட்டு கருகாமல் சிவக்க ஆற விட்டுப் பொடிக்கவும்.
  10. ஊறுகாய தாளிக்க:-
  11. எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
  12. கடுகு -1/2 டீஸ்பூன்
  13. பூண்டு பற்கள் , பச்சை மிளகாய் நறுக்கி தேவைக்கு விரும்பினால்.
  14. தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.மிளகாய் வற்றல் கூட்டினால் சேர்க்க தேவையில்லை.

வழிமுறைகள்

  1. தோட்டத்து நார்த்தங்காய் பறித்து எடுத்து வந்தது.
  2. தண்ணீர் விட்டு ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும்.
  3. மறுநாள் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும் வெந்து விடக் கூடாது.கொதி நீரை வடித்து சாதாரண தண்ணீர் விட்டு மீண்டும் ஒரு நாள் முழுவதும் வௌக்கவும்.
  4. மறுநாள் தண்ணீர் வடிக்கவும்.சிறிய நார்த்தங்காயாக இருந்தால் நான்காக கீறி நடுவில் உப்பு வைக்கலாம்.
  5. பெரிய காயாக இருந்தால் சிறிய துண்டாக நறுக்கி உப்பு வைக்கவும்.
  6. உப்பு வைத்து ஒரு துணி கொண்டு மூடவும்.
  7. மூடிவெயிலில் வைக்கும் பொழுது ஒரு பானை கொண்டு மூடி வைப்பது பாரம்பரியம் .
  8. குறைந்தது 7-10 நாட்கள் வைத்து எடுத்தால் காய் நன்கு நீரிவிடும்.
  9. (இதையே அடைகாயாக உபயோகப்படுத்த இத்துடன் எலுமிச்சை ,பச்சை மிளகாய் உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.அப்படியேயும் சாப்பிடலாம்.அல்லது மிளகாய்த்தூள் சேர்த்தும் சாப்பிடலாம்.)
  10. பின்பு தேவைக்கு ஊறிய நார்த்தங் காய் எடுத்து ஊறுகாய் போட வேண்டியது தான்.
  11. நார்த்தையை பொடியாக அரியவும்.அதில் அரைத்க பொடியை சேர்த்து வேக வைக்கவும் .
  12. விரும்பினால் பூண்டு பற்கள் ,பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கி எண்ணெயில் வெந்து கொதிக்க வைத்த நார்த்தையில் போடவும்.ஆற வைத்து பாட்டிலில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.
  13. நார்த்தங்காய் ஊறுகாய் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்