வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு கொழுக்கட்டை

Photo of Arisi maavu / Rice flour kozhukattai by Asiya Omar at BetterButter
3090
6
0.0(0)
0

அரிசி மாவு கொழுக்கட்டை

Nov-07-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு கொழுக்கட்டை செய்முறை பற்றி

தென் தமிழகத்தில் அரிசி மாவில் ரொட்டி,கொழுக்கட்டை,புட்டு பாரம்பரியமாக செய்வது வழக்கம்.வறுத்த அரிசி மாவில் தேங்காய்த்துருவல்,வெங்காயம்,மிளகாய்,மல்லி,கருவேப்பிலை சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • தினமும்
 • தமிழ்நாடு
 • ஸ்டீமிங்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. வறுத்த அரிசி மாவு (புட்டு மாவு) -2 கப்
 2. நறுக்கிய பெரிய வெங்காயம் -2
 3. தேங்காய்த்துருவல் -4 டேபிள்ஸ்பூன்
 4. பச்சை மிளகாய் -2
 5. மல்லி,கறிவேப்பிலை -சிறிது.
 6. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

 1. புட்டு செய்யும் வறுத்த அரிசி மாவை எடுத்துக் கொளள்வும். தேங்காய்,மிளகாய் ,மல்லி ,கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்
 2. வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்.மாவுடன் தேங்காய் அரைவை,வெங்காயம் சேர்க்கவும்.
 3. அத்துடன்சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து மாவை விரவவும்.
 4. கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் மேல் தட்டில் வைத்து மூடி ஆவியில் வேக வைக்கவும்.
 5. 15- 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஆவியடங்கியவுடன் திறந்து சூடாகப் பரிமாறவும்
 6. சுவையான அரிசி மாவு கொழுக்கட்டை தயார். ஊர் ஸ்பெஷல் அசத்தலாக இருக்கும்.கறி சால்னா,தால்ச்சா அல்லது தேங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்