நெல்லிக்காய்த் தயிர் ஸ்மூத்தி | Amla yogurt smoothie in Tamil

எழுதியவர் Priya Srinivasan  |  13th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Amla yogurt smoothie by Priya Srinivasan at BetterButter
நெல்லிக்காய்த் தயிர் ஸ்மூத்திPriya Srinivasan
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

375

0

நெல்லிக்காய்த் தயிர் ஸ்மூத்தி recipe

நெல்லிக்காய்த் தயிர் ஸ்மூத்தி தேவையான பொருட்கள் ( Ingredients to make Amla yogurt smoothie in Tamil )

  • சுவைக்கேற்ற உப்பு
  • 3/4 கப் தண்ணீர்
  • 3/4 கப் கெட்டித் தயிர்
  • 1/2 தேக்கரண்டி உலர் புதினா அல்லது 3-4 புதிய புதினா இலைகள்
  • ஒரு கொத்து கரிவேப்பிலை
  • 1 எண்ணிக்கை பச்சை மிளகாய்
  • 3 எண்ணிக்கை நெல்லிக்காய்

நெல்லிக்காய்த் தயிர் ஸ்மூத்தி செய்வது எப்படி | How to make Amla yogurt smoothie in Tamil

  1. நெல்லிக்காயைத் தண்ணீரில் கழுவிக்கொள்க. அவற்றை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்குக. (அவற்றை நான் குறுக்காக வெட்டிக்கொண்டேன்)
  2. நறுக்கிய நெல்லிக்காய், கரிவேப்பிலை, மிளகாய், புதினா இலைகள் அனைத்தையும் ஒன்றாக ஒரு மிக்சியில் எடுத்து, சாந்தாக அரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் 2-3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. அரைத்த சாந்துடன் தயிர், தண்ணீர், உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். கை பிளண்டரின் மென்மையாக நுரைவரும்வரை அடித்துக்கொள்ளவும்.
  4. ஒரு கிளாசில் ஊற்றி உடனே பரிமாறவும்.

Reviews for Amla yogurt smoothie in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.