வீடு / சமையல் குறிப்பு / பப்பாளி ஹல்வா கஸ்டர்ட் பார்ஃபைட்

Photo of Papaya halwa custard parfait by Rabia Hamnah at BetterButter
400
2
0.0(0)
0

பப்பாளி ஹல்வா கஸ்டர்ட் பார்ஃபைட்

Nov-15-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பப்பாளி ஹல்வா கஸ்டர்ட் பார்ஃபைட் செய்முறை பற்றி

பப்பாளி இரத்தத்தை சுத்திகரிக்க வல்லது. பப்பாளி இலை சாறு எந்த வகையான காய்ச்சலையும் குணப்படுத்தும் அறு மருந்து.

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
  2. சர்க்கரை : 3/4 கப்
  3. நெய் : 4 தே. கரண்டி
  4. காய்ச்சின பால் : 1/2 கப
  5. ஏலப்பொடி – சிறிதளவு
  6. முந்திரி – 7
  7. பாதாம் பருப்பு – 7

வழிமுறைகள்

  1. முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள். பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
  3. அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும். பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும். பப்பாளி பழ ஹல்வா தயார்.
  4. சேமியா கஸ்டர்ட்: 2 கிளாஸ் பாலுடன் 4 -5 டேபிள் ஸ்பூன் மில்க் மெய்ட் சேர்த்து காய்ச்சவும். பின்பு சேமியாவை சேர்த்து 2 சொட்டு வெனிலா எஸன்ஸ் சேர்த்து கொள்ளவும்.
  5. ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளாருடன் தண்ணீர் சேர்த்து கலந்து சேமியா கலவையில் சேர்த்து தேவைக்கு சீனி சேச்த்து ஆற விடவும்.
  6. பின்பு ஒரு கிளாஸில் பப்பாளி கலவை பின்பு சேமியா கஸ்டர்ட் என மூன்று நான்கு லேயராக வைத்து செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி வைத்து அலங்கரித்து ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்