வீடு / சமையல் குறிப்பு / இறால் ப்ரைட் ரைஸ்

Photo of Prawn fried rice by Asiya Omar at BetterButter
533
9
0.0(0)
0

இறால் ப்ரைட் ரைஸ்

Nov-22-2017
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

இறால் ப்ரைட் ரைஸ் செய்முறை பற்றி

இறாலுடன் காய்கறிகள் சேர்த்து ப்ரைட் ரைஸ ்செய்து பார்ட்டியின் போது அசத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. இறால் - 1 கிலோ வாங்கி உரித்து வைக்கவும்.
  2. இறாலுடன் சேர்க்க:-
  3. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  4. மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  5. லெமன் ஜூஸ் பாதி பழம்
  6. உப்பு - தேவைக்கு.
  7. பாசுமதி அரிசி - அரைக்கிலோ
  8. எண்ணெய் - 4 +1 மேஜைக்கரண்டி
  9. பட்டர் - 2 மேஜைக்கரண்டி
  10. வெங்காயம நறுக்கியது - 1
  11. பூண்டு நறுக்கியது - 6 பற்கள்
  12. பொடியாக நறுக்கிய காய்கறி கலவை -2 கப்
  13. (கேரட்,முட்டைகோஸ்,பீன்ஸ்,கொடைமிளகாய்,பச்சைபட்டாணி)
  14. சோயா சாஸ் -1 மேஜைக்கரண்டி
  15. அஜினோமோட்டோ விரும்பினால் கால் தேக்கரண்டி
  16. மிளகு,உப்புத்தூள் - தேவைக்கு
  17. முட்டை - 2
  18. நறுக்கிய வெங்காயத்தாள் - அலங்கரிக்க.

வழிமுறைகள்

  1. முதலில் சுத்தம் செய்த இறாலை நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.அத்துடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,லெமன் ஜூஸ் பாதி,உப்பு சேர்த்து விரவி வைக்கவும்.
  2. அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.தண்ணீரை கொதிக்க வைத்து தேவைக்கு உப்பு போட்டு ஒன்றொன்றாக சோறு இருக்குமாறு வடித்து ஒரு பெரிய தட்டில் ஆற வைக்கவும்.
  3. ஒரு பேனில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு தயார் செய்த இறாலை நன்கு வாட்டி வைக்கவும்.
  4. ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ,வெண்ணெய் சேர்க்கவும்.சூடானவுடன்,வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் காய்கறிகள் சேர்க்கவும்.
  5. காய்கள் பாதி வெந்து வரும் பொழுது வேக வைத்த இறால் சேர்க்கவும்.பிரட்டி விடவும். சோயா சாஸ் சேர்க்கவும்.
  6. விரும்பினால் அஜினோமோட்டோ சேர்க்கலாம்.
  7. உப்பு சரி பார்க்கவும்.
  8. முட்டையை உப்பு, மிளகு, சேர்த்து ஆம்லெட் போல் செய்து சிறியதாக துண்டு போட்டு வைக்கவும்.
  9. வடித்த சோறு இறால் காய்கறிகளுடன் சேர்க்கவும்.நன்கு உடையாமல் மெதுவாக பிரட்டவும்.முட்டை துண்டுகள் சேர்க்கவும்.நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கவும்.
  10. ஒரு சேர பிரட்டவும். சுவையான இறால் ப்ரைட ரைஸ் தயார்.பார்ட்டியில் செய்து பரிமாறினால் அனைவருக்கும் பிடித்தமாய் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்