வீடு / சமையல் குறிப்பு / சிறிய உருளைகிழங்கு தம் பிரியாணி

Photo of BABY POTATO / ALOO DUM BRIYANI by Priya Tharshini at BetterButter
1354
4
0.0(0)
0

சிறிய உருளைகிழங்கு தம் பிரியாணி

Nov-27-2017
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிறிய உருளைகிழங்கு தம் பிரியாணி செய்முறை பற்றி

சிறிய உருளைகிழங்கு வைத்து செய்யும் தம் பிரியாணி வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிறிய உருளைகிழங்கு – 15
  2. பாஸ்மதி அரிசி – 3/4 கப்
  3. நெய்  – 2 மேசைக்கரண்டி
  4. பட்டை – சிறிய துண்டு
  5. ஏலக்காய் – 1
  6. பிரிண்சி இலை - 1
  7. கிராம்பு – 3
  8. சீரகம் - 1 தேக்கரண்டி
  9. வெங்காயம் – 1 நீளமாக நறுக்கியது
  10. ப.மிளகாய் (கீறியது) – 3
  11. இஞ்சு பூண்டு விழுது– 1 தேக்கரண்டி
  12. புதினா – 2 மேசைக்கரண்டி
  13. கொத்தமல்லி – 3 மேசைக்கரண்டி
  14. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
  15. மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  16. கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
  17. உப்பு – 1 தேக்கரண்டி
  18. தயிர் – 3 மேசைக்கரண்டி
  19. தண்ணீர் – தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். 6 கப் தண்ணீரை சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  2. நன்கு கொதித்ததும்  பாஸ்மதி அரிசி தேவையான உப்பு சேர்க்கவும்.அரிசியை 80% வேகவிடவும்.
  3. அரிசி வெந்ததும் தண்ணீரை வடித்து ஆறவிடவும். சிறிய உருளைகிழங்கு தோல் நீக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  4. தம் போட இருக்கமான மூடி உள்ள அடிகனமான பாத்திரம் உபயோகிக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் நெய் சுடாக்கி பட்டை, ஏலக்காய்,கிராம்பு,பிரிண்சி இலை,ப.மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  6. நீளமாக நறுக்கிய வெங்காயம், இஞ்சு பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  7. சிறிய உருளைகிழங்கு, மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். மூடிபோட்டு 10  நிமிடம் வேகவிடவும். அப்பப்போ திறந்து அடிபிடிக்காமல் கலறவும்.
  8. 10 நிமிடத்தில் வெங்காயம் பொன் நிறமாக மாறி உருளைகிழங்கு நன்கு வேந்திருக்கும்.
  9. பிறகு சிறிது புதினா,உப்பு,தயிர்,மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  10. சிறிது தண்ணீர் சேர்த்து சாஸ் போல ஆக்கவும்.
  11. அதன் மேல் ஆறவைத்த சாதம் மற்றும் கொத்தமல்லியை லேயர் செய்யவும்.
  12. 10 நிமிடம் தீயை நன்றாக குறைத்து தம் போடவும். அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
  13. பிறகு அடுப்பை அனைத்து கலறி பறிமாறவும்.  

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்