வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி சாதம்

Photo of Coriander rice by neela karthik at BetterButter
63
3
0.0(0)
0

கொத்தமல்லி சாதம்

Nov-28-2017
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி சாதம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான மிகவும் சுலபமான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொத்தமல்லி தழை 1 கட்டு
  2. கடுகு தாளிக்க
  3. சீரகம் சிறிது
  4. இஞ்சி 1 துண்டு
  5. பச்சை மிளகாய் 4
  6. வடித்த சாதம் 1 கப்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் தாளிக்க
  9. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  10. உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் சாதத்தை வடித்து ஆற வைத்துக் கொள்ளவும்.
  2. கொத்தமல்லி தழையை தண்டை நீக்கி விட்டு நன்றாக அலசிக் கொள்ளவும்.
  3. மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி தழை, இஞ்சி,மிளகாய் இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  4. சறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைக்கவும்.
  5. வாணலியில் எண்ணெய் காய விடவும்.
  6. எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், க.பருப்பு,உ.பருப்பு சேர்த்து தாளிக்கவும்.அதனுடன் அரைத்து வைத்துள்ள தழையை சேர்க்கவும்.
  7. தீயை மிதமாக வைத்து 5 முதல் 7 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
  8. கலவை நன்கு கொதித்ததும் ஆற வைத்த சாதம் சேர்த்து கிளறவும்.
  9. உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கிளறினால் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்