வீடு / சமையல் குறிப்பு / சிலோன் பரோட்டா

Photo of Ceylon Parota by Margaret Charles at BetterButter
241
4
0.0(0)
0

சிலோன் பரோட்டா

Dec-07-2017
Margaret Charles
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிலோன் பரோட்டா செய்முறை பற்றி

கைம்மா கறி கொண்டு செய்த ரொட்டி வகை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • முகலாய்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் கைம்மா - 200 கி
  2. வெங்காயம் - 1
  3. இஞ்சி பூண்டு விழுது - 1 மே க
  4. தக்காளி -1
  5. மஞ்சள் தூள் - 1/2 தே க
  6. வத்தல் தூள் - 1 தே க
  7. மல்லி பொடி - 1/2 தே க
  8. சீரக பொடி - 1/2 தே க
  9. உப்பு - தேவைக்கேற்ப
  10. மைதா மாவு - 1 கப்
  11. முட்டை - 2
  12. நல்லெண்ணெய் - 2 மே க

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்
  4. கைம்மா சேர்த்து 15 நிமிடங்கள் குறைந்த தீயில் மூடி வைத்து சமைக்கவும்
  5. பின்னர் மஞ்சள் தூள், வத்தல் தூள் , மல்லி பொடி உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்
  6. சீரக பொடி சேர்த்து 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வதக்கவும்
  7. தண்ணீர் வற்றி உலர்ந்து வந்த உடன் அடுப்பை அணைத்து விடவும்
  8. மைதா மாவு உப்பு எண்ணெய் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும். மிகவும் மிருதுவாக இருக்க வேண்டும்.
  9. மிகவும் மெல்லிய பெரிய ரொட்டிகள் தேய்க்கவும்.
  10. முட்டைகளை அடித்து வைத்து கொள்ளவும்
  11. ரொட்டியின் மீது ஒரு தேக்கரண்டி முட்டை ஊற்றி நன்றாக விரித்து விடவும்.
  12. பின்பு செய்து வைத்த கைம்மா கலவை வைத்து நாலு பக்கத்திலிருந்து மூடவும்.
  13. அடுப்பில் கல் வைத்து மிதமான சூட்டில் இரு பக்கமும் நன்கு சிவக்க வைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்