வீடு / சமையல் குறிப்பு / நோ பேக் ஸ்ட்ராபெரி ப்ரலைன் கேக்

Photo of No Bake Strawberry Praline Cake by Ayesha Ziana at BetterButter
49
3
0.0(0)
0

நோ பேக் ஸ்ட்ராபெரி ப்ரலைன் கேக்

Dec-09-2017
Ayesha Ziana
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நோ பேக் ஸ்ட்ராபெரி ப்ரலைன் கேக் செய்முறை பற்றி

பிஸ்கட், ஸ்ட்ராபெரி, பிராஸ்டிங் எல்லாம் சேர்த்து செய்த கேக். மிகவும் ருசியானது.

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • டின்னெர் பார்ட்டி
 • விஸ்கிங்
 • சில்லிங்
 • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. பிஸ்கட்(NICE பிராண்ட்) 24
 2. ஸ்ட்ராபெரி பியூரீ அல்லது ஸ்ட்ராபெரி அலங்கரிக்க
 3. ஆரஞ்சு 1 அல்லது 2
 4. பொடித்த சீனி ஆரஞ்சு ஜூஸ்காக
 5. ஸ்ட்ராபெரி பிராஸ்டிங் செய்ய: ஸ்ட்ராபெரி பியூரி 1 1/2 டேபிள் ஸ்பூன்
 6. உப்பில்லாத வெண்ணெய்(மிருதுவானது) 75 கிராம் உத்தேசம்
 7. பொடித்த சீனி 1 கப்
 8. உப்பு ஒரு சிட்டிகை
 9. வெனிலா எஸ்ஸென்ஸ் 1/4 ஸ்பூன்
 10. ப்ரலைன் செய்ய: முந்திரி 25 முதல் 30
 11. பொடித்த சீனி 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

 1. பிராஸ்டிங் செய்ய: முதலில் வெண்ணெய், உப்பு சேர்த்து 7 நிமிடங்கள் விஸ்கால் அடிக்கவும். பின்னர் பொடித்த சீனியை சலித்து சேர்த்து மீண்டும் அடிக்கவும். எசன்ஸ், ஸ்ட்ராபெரி பியூரி சேர்த்து மீண்டும் பிராஸ்டிங் பதம் வரும் வரை அடிக்கவும்.
 2. ப்ரலைன் செய்ய: ஒரு பேனில் பொடித்த சீனி கரைத்து, முந்திரி சேர்த்து கிளறவும். முந்திரி சீனியுடன் இணைந்ததும், ஒரு தட்டில் கொட்டி, சில நிமிடங்களில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். ப்ரலைன் தயார்.
 3. ஆரஞ்சு பழத்தை ஜூஸர் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி, பொடித்த சீனி சேர்த்து கலந்து வைக்கவும்.
 4. கேக் செய்ய: ஒரு சதுரம்/செவ்வகம் பாக்ஸில், முதலில் 8 பிஸ்கட்களை ஆரஞ்சு ஜூசில் நன்றாக நனைத்து, அடுக்கவும்.
 5. அதன் மேலே பிராஸ்டிங் தடவவும்.
 6. மீண்டும் பிஸ்கட் நனைத்து அடுக்கவும். மீண்டும் பிராஸ்டிங் தடவவும்.
 7. பின்னர் ப்ரலைன் தூவி, மேலே ஸ்ட்ராபெரி பழங்கள் அல்லது பியூரி வைத்து அலங்கரிக்கவும். பின்னர் பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது துண்டுகள் போட்டு பரிமாறவும்.
 8. அருமையான கேக் தயார். இது பார்ட்டிகளுக்கு ஏற்ற டெசர்ட்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்