Photo of Koththu Parotta by Yasmin Shabira at BetterButter
542
4
0.0(1)
0

Koththu Parotta

Dec-13-2017
Yasmin Shabira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பரோட்டா : 4
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. பச்சை மிளகாய் : 2
  5. இஞ்சி பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
  6. முட்டை : 2
  7. மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
  8. ஜீரகத்தூள் : 1/2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா : 1/2 தேக்கரண்டி
  10. எண்ணெய் : 4 மேசைகரண்டி
  11. உப்பு : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பரோட்டாவை மிக்சியில் இட்டு பொடித்துக்கொள்ளவும்... பொடி ஆகி விடக்கூடாது... 2 அல்லது 3 சுற்று சுற்றி சிறு சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்...
  2. பின்னர் ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்... வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்...
  3. நன்றாக வதங்கி பச்சை வாசம் போன பின் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவும்... தக்காளி நன்றாக மசிந்த பின் மிளகாய் தூள், கரம் மசாலா, ஜீரகதூள் & உப்பு சேர்க்கவும்....
  4. கலவை நன்றாக வதங்கிய பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்... பிறகு அதில் அரைத்த பரோட்டாவை சேர்த்து நன்றாக ஒன்று சேறுமாறு கிளறி 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கினால் சுவையான கொத்து பரோட்டா ரெடி!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai Annamalai
Dec-13-2017
Adaikkammai Annamalai   Dec-13-2017

Superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்