வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் பருப்பு உசிலி

Photo of Beans paruppu usili by Krishnasamy Vidya Valli at BetterButter
544
2
0.0(0)
0

பீன்ஸ் பருப்பு உசிலி

Dec-15-2017
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் பருப்பு உசிலி செய்முறை பற்றி

சவுத் இந்தியன் லஞ்ச் பார்ட்டியில் உருளைகிழங்கு ரோஸ்ட்க்கு அடுத்தபடியாக இடம் பிடிக்கும் முக்கியமான ஸைட் டிஷ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீன்ஸ் - பொடியாக நறுக்கியது - 1 கப்
  2. கடலைப்பருப்பு - 1 / 4 கப்
  3. துவரம்பருப்பு - 1 / 4 கப்
  4. பச்ச மிளகாய் - 1
  5. மிளகாய் வத்தல் - 2
  6. பெருங்காயம் - 1 சிட்டிகை
  7. தேங்காய்துருவல்-1தேக்கரண்டி
  8. உப்பு - 3/4 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி - 1 / 4 தேக்கரண்டி
  10. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  12. மிளகாய்வத்தல்-1
  13. எண்ணெய் - 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பீன்ஸை பொடியாக நறுக்கி மஞ்சள்பொடி பாதியளவு உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் விட்டு வேக வைத்து எடுக்கவும்
  2. கடலைப்பருப்பு துவரம்பருப்பு சேர்த்து இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்
  3. பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் மீதியுள்ள உப்பு பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  4. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பீன்ஸை வதக்கவும்
  5. வதக்கியதை தனியாக எடுத்து வைக்கவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்
  7. உதிர்உதிராக வரும் வரை கிளறவும்
  8. முதலில் வதக்கிய பீன்ஸ் தேங்காய்துருவல் சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்