காளான் பிரியாணி | Mushroom Biryani in Tamil

எழுதியவர் Balachandrika Kandaswamy  |  26th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mushroom Biryani by Balachandrika Kandaswamy at BetterButter
காளான் பிரியாணிBalachandrika Kandaswamy
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

549

0

காளான் பிரியாணி recipe

காளான் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mushroom Biryani in Tamil )

  • கொத்துமல்லி இலைகள் - 1 கைப்பிடி அளவு
  • தண்ணீர் - 2 1/2 கப்
  • பச்சை மிளகாய் - 2
  • கரம் மசாலா - 1 1/2 தேக்கரண்டி
  • மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ற அளவு
  • எண்ணெய் - 4-5 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 1
  • இலவங்கப்பட்டை குச்சிகள் - 3 சிறிய துண்டுகள்
  • பே இலைகள் - 1
  • பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  • பெரிய தக்காளி - 1/2 அல்லது சிறிய தக்காளி - 1
  • பெரிய வெங்காயம் - 1/2 (மீதமுள்ள பாதியை ரைத்தா தயாரிக்கப் பயன்படுத்தவும்)
  • புதினா இலை - 1 கைப்பிடி அளவு
  • காளான் (சுத்தப்படுத்தப்பட்டது நறுக்கப்பட்டது) - 1 கப் (குவியல்)
  • பாஸ்மதி அரிசி - 1 1/2 கப் [1 கப் அளவு = 150 மிலி]

காளான் பிரியாணி செய்வது எப்படி | How to make Mushroom Biryani in Tamil

  1. பாஸ்மதி அரிசியை 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  2. பாத்திரத்தை எண்ணெயோடு சூடுபடுத்தி பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, பே இலைகள், இலவங்கப்பட்டைகளை சேர்க்கவும்.
  3. ஒரு நிமிடத்திற்கு அதை வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா இலைகளைச் சேர்க்கவும்
  4. புதினாய இலைகள் சுருங்கும்வரை வறுத்து இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  5. மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கி காளானைச் சேர்க்கவும்
  6. காளான்கள் மிருதுவானதும் தக்காளி சேர்த்து வதக்கி 5 நிமிடத்திற்கு மூடி சமைக்கவும்
  7. ஊறவைத்த பாஸ்மதி அரிசியைக் கழுவி கலவையோடு சேர்க்கவும்
  8. மசாலாவுடன் கலந்து பிரஷர் குக்கருக்கு மாற்றவும். 2 1/2 கப் தண்ணீரும் கொத்துமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
  9. ஒரு விசிலுக்குப் பிறகு தீயை நிறுத்தவும். பிரஷர் வெளியேறியதும், சாதத்தை மெதுவாக முள்கரண்டியால் கலக்கவும்.
  10. வெங்காய ரைத்தாவோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Mushroom Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.