வீடு / சமையல் குறிப்பு / பிரியாணி எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி

Photo of Briyani  Brinjal gravy by Asiya Omar at BetterButter
472
8
0.0(0)
0

பிரியாணி எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி

Dec-21-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பிரியாணி எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்முறை பற்றி

பிரியாணிக்கு பக்க உணவாக நிச்சயம் கத்திரிக்காய் இருக்கும். இந்த எண்ணெய் கத்திரிக்காய கிரேவி செய்து பாருங்க,அசத்தலாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிறிய வயலட் கத்திரிக்காய் - அரைக்கிலோ
  2. நல்ல எண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
  3. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி (விரும்பினால் தான்)
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. கருவேப்பிலை - 3 இணுக்கு
  6. புளி - எலுமிச்சை அளவு
  7. உப்பு - தேவைக்கு.
  8. சீனி அல்லது வெல்லம் - 1 தேக்கரண்டி.
  9. அலங்கரிக்க நறுக்கிய மல்லி இலை.
  10. வறுத்துப் பொடிக்க:-
  11. மிளகாய் வற்றல் - 5
  12. வெள்ளை எள்ளு - 2 மேஜைக்கரண்டி
  13. தோல் நீக்கிய வேர்க்கடலை -2 மேஜைக்கரண்டி
  14. கொத்தமல்லி விதை - 2 மேஜைக்கரண்டி
  15. சீரகம் - 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயை நன்கு அலசி காம்பு நீக்கி நான்காக தொடுப்பு வைத்து அடிப்பகுதியில் கீறி விடவும். மஞ்சள் தூள் ,உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.கருக்காது. தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. புளியை ஊற வைக்கவும்.வறுக்க சொன்னதை வறுத்து ஆற வைக்கவும்.
  3. சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும்.
  4. ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்ல எண்ணெய் விடவும்
  5. கத்திரிக்காயை போட்டு பிரட்டி பிரட்டி பொரிக்கவும்.
  6. நிறம் மாறி வெந்து வரும் பொழுது இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  7. நன்கு வதக்கவும்.அரைத்த மசால் சேர்க்கவும்.
  8. கொதிக்க விடவும்.அடுப்பை குறைக்கவும்.புளித்தண்ணீர் சேர்க்கவும்.
  9. மூடி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
  10. நன்கு ஒரு சேர வெந்து எண்ணெய் மேலே வரும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
  11. சுவையான பிரியாணி எண்ணெய்க் கத்திரிக்காய் தயார்.
  12. பிரியாணிக்கு இந்த முறையில் செய்து பக்க உணவாக ரைத்தாவுடன் பரிமாறவும்.
  13. சூப்பராக இருக்கும்.பல முறையில் செய்து பரிமாறியிருககிறேன்.இந்தக் குறிப்பு அசத்தலாக இருக்கும்.தேங்காய்,தக்காளி,வெங்காயம் கிடையாது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்