Photo of Brinjal Pachadi by Yasmin Shabira at BetterButter
663
8
0.0(3)
0

Brinjal Pachadi

Dec-22-2017
Yasmin Shabira
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் : 2
  2. வெங்காயம் : 3
  3. தக்காளி : 2
  4. இஞ்சி பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
  5. பட்டை : 1 துண்டு
  6. க்ராம்பு : 1
  7. ஏலக்காய் : 1
  8. கடகு : 1 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் : 1 மேசைக்கரண்டி
  11. ஜீரகதூள் : 1 தேக்கரண்டி
  12. மல்லி தூள் : 1 தேக்கரண்டி
  13. புளி : ஒரு எலுமிச்சை அளவு
  14. எண்ணெய் : 3 மேசைக்கரண்டி
  15. உப்பு : தேவையான அளவு
  16. முழு மிளகு : 1/2 தேக்கரண்டி
  17. வெள்ளை எள்ளு : 1/2 தேக்கரண்டி
  18. வேர்க்கடலை : 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மிளகு, எள்ளு மற்றும் வேர்க்கடலை நன்றாக வாசம் வரும் வரை வருத்து அரைத்து கொள்ளவும்...
  2. புளியை கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்...
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை க்ராம்பு ஏலக்காய் மற்றும் கடுகு சேர்த்து கொள்ளவும்..
  4. கடுகு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்...
  5. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...
  6. நன்றாக பச்சை வாசனை போன பின் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்...
  7. பின்னர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் ஜீரக தூள் மல்லி தூள் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்றாக கிளறி 2-3 நிமிடம் நன்றாக வதங்க விடவும்...
  8. பிறகு கத்தரிக்காய் சேர்த்து கிளறி 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்...
  9. கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் ஊற்றி மேலும் 5 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்...
  10. மிகவும் சுவையான பிரியாணிக்கு சிறந்த கத்தரிக்காய் பச்சடி ரெடி!!!

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Salomia Nada
Dec-24-2017
Salomia Nada   Dec-24-2017

Sema

Adaikkammai Annamalai
Dec-23-2017
Adaikkammai Annamalai   Dec-23-2017

Sema d

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்