வீடு / சமையல் குறிப்பு / வெந்தயப் புலாவ்

Photo of Methi Millet Pulao by Hari Chandana P at BetterButter
587
93
5.0(0)
0

வெந்தயப் புலாவ்

Jan-31-2016
Hari Chandana P
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் தினை
  2. 1 கப் வெந்தயக் கீரை, இறுக்கமாக கட்டப்பட்டது
  3. 2 கப் தண்ணீர்
  4. 1 1/2கப் நறுக்கிய தக்காளி
  5. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  6. 4-5 பச்சை மிளகாய்
  7. 3-4 பூண்டு பற்கள்
  8. 1 சிறிய துண்டு இஞ்சி
  9. 1 1/2 இன்ச் துண்டு இலவங்கப்பட்டை குச்சி
  10. 3 கிராம்பு
  11. 2 ஏலக்காய்
  12. 2 தேக்கரண்டி எண்ணெய்
  13. 1/2 தேக்கரண்டி சீரகம்
  14. கொஞ்சம் முந்திரி பருப்பு
  15. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை கரடுமுரடானச் சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடுபடுத்தி சீரகம், முந்திரி பருப்பைச் சேர்த்து அவற்றை வறுத்துக்கொள்ளவும்.
  3. பழுப்பானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். அரைத்த மசாலாவை அதனோடு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். இப்போது கழுவிய வெந்தயக் கீரையைச் சேர்த்து உதிரும்வரை வறுக்கவும்.
  4. பிறகு கழுவி வடிக்கட்டிய தினை, தக்காளி, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில்களுக்கு வைக்கவும். ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்