வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் பச்சடி

Photo of Brinjal Pachadi by Asiya Omar at BetterButter
1058
3
0.0(0)
0

கத்திரிக்காய் பச்சடி

Dec-31-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் பச்சடி செய்முறை பற்றி

சுலபமாகச் செய்யக்கூடிய சுவையான குறிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ
  2. கீறிய பச்சை மிளகாய் -3
  3. நறுக்கிய வெங்காயம் -1
  4. நறுக்கிய தக்காளி -1
  5. சீரகத்தூள் -அரை தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி( விரும்பினால்)
  7. மல்லி,கருவேப்பிலை
  8. புளிக்கரைசல் - நெல்லியளவு
  9. தேங்காய்த் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  10. உப்பு - தேவைக்கு.
  11. தாளிக்க:-
  12. நல்ல எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  13. கடுகு,உளுத்தம்பருப்பு -1 தேக்கரண்டி
  14. கிள்ளிய வற்றல் -1
  15. கருவேப்பிலை -2 இணுக்கு.

வழிமுறைகள்

  1. கத்திரிக்காய்,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
  2. நறுக்கியதை குக்கரில் சேர்த்து,உப்பு,இஞ்சி பூண்டு விழுது,சீரகத்தூள்,புளிக்கரைசல் சேர்த்து 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  3. தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து விடவும்.
  4. நன்கு மத்தினால் அல்லது அகப்பையால் மசிக்கவும்.நறுக்கிய மல்ல இலை சிறிது சேர்க்கவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு,கடுகு,உளுத்தம் பருப்பு,கிள்ளியவற்றல்,கருவேப்பிலை தாளித்துக் கொட்டி கலந்து விடவும்.
  6. சுவையான கத்திரிக்காய் கடைசல் தயார்.
  7. இதனை பக்க உணவாக கஞ்சி,இட்லி,தோசை,சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்