வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கீரை சாம்பார்

Photo of Common purslane Greens Sambar by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
690
3
0.0(0)
0

பருப்பு கீரை சாம்பார்

Jan-02-2018
Muthulakshmi Madhavakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கீரை சாம்பார் செய்முறை பற்றி

பருப்பு கீரை, பாசிப்பருப்பு‌ அல்லது துவரம் பருப்பு சேர்த்து ஆரோக்கியமான சாம்பார். சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் பொடியாக நறுக்கிய பருப்புகீரை
  2. 1/4 கப் துவரம்பருப்பு
  3. 10 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்
  4. 1 தக்காளி, பொடியாக நறுக்கவும்
  5. 4 சிறிய மாங்காய் துண்டுகள்
  6. 1.5 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. சிறிது பெருங்காயம்
  9. 1/2 டீஸ்பூன் கடுகு
  10. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  11. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின் குக்கரில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின் நறுக்கிய கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். கீரை நன்கு சுருங்கும் வரை வதக்கவும்.
  4. அவை நன்கு வதங்கியதும் 2 கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
  5. கீரை நன்கு வெந்ததும், மாங்காய் துண்டு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். மாங்காய் இல்லை என்றால் சிறிது புளி கரைசல் சேர்த்து கொள்ளலாம்.
  6. இப்போது வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
  7. பெருங்காயம் சேர்த்து 7 முதல் 10 நிமிடங்கள் சாம்பார் நன்கு கொதித்ததும் இறக்கவும். சுவையான பருப்பு கீரை சாம்பார் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்